திருச்சி கலைக்காவிரி கல்லூரியில் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்ற தொடக்க விழா.

0
Full Page

திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் உள்ளிட்ட அனைத்து மன்றங்களின் தொடக்க விழா நடைபெற்றது.இந்நிகழ்வில் கல்லூரியின் இயக்குநர் அருள் பணிS.G.சாமிநாதன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ப.நடராஜன். தண்ணீர் அமைப்பின் செயலாளர் கே.சி. நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

தண்ணீர் அமைப்பின் தலைவரும் தண்ணீர் மாணவர் மன்ற இயக்குநருமான ஜென்னீஸ் உணவக மேலாண்மைக் கல்லூரி முதல்வர் பொன்னிளங்கோ வாழ்த்துரை வழங்கினார். அவர்தம் வாழ்த்துரையில் கல்லூரிக் காலத்தில் மாணவர்களை முழுமையாக்கி பண்பை வளர்த்தெடுக்க துணை புரிவது இது போன்ற மன்றங்கள்தான். இது போன்ற மன்றங்கள் தான் சமூகத்தை புரிந்து கொள்ளவும் சமூகச் சிந்தனைகளையும் உருவாக்கவும் களம் அமைத்து தருகின்றன. தன்னையும் தான் வாழும் சமூகத்தையும் ஒரு சேர புரிந்து கொண்டு மாணவர்கள் செயலாற்றிட வேண்டும் என்றார்.

Half page

அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற விவேகானந்தன் ஆளுமைத் திறன் மிக்க மாணவர்களை உருவாக்க இது போன்ற மன்றங்கள் ஆகச்சிறந்த பங்களிப்புகளை வழங்குகின்றது.பேச்சு, எழுத்து,சிந்தனை, செயல்திறன் யாவையும் வளர்த்துக் கொள்ள இம்மன்றங்களை மாணவர்கள் ஆர்வமுடன் முன் வந்து இணைந்து செயல்பட வேண்டும் என்றார். சமூகச் சிந்தனையுடன் கூடிய கல்வியே மண்ணுக்கும் மக்களுக்கும் பயன் தரும். கலாம் கனவு கண்ட குறுங்காடுகளை வளர்த்தெடுக்கும் விதமாக 4 கோடி மரக்கன்றுகளை நட்டு பசுமை பூமியாக மாற்றிட வேண்டும் என்ற அடிப்படையில் 33 மாவட்டங்களிலும் களப்பணியில் மரக்கன்றுகளை நட்டு குறுக்காடுகள் வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். வரும் செப் 22 ஆம் தேதி 1கோடி பனை விதைகளை விதைக்க திட்டமிட்டு உலக சாதனை நிகழ்த்தவுள்ளோம். எனவே மாணவர்கள் சமூக மாற்றுச் சிந்தனையை வளர்த்துக் கொண்டு இது போன்ற மன்றங்களில் சிறப்பாக செயல்பட்டு பெருமை சேர்க்க வேண்டும். கடினமாக உழைத்து கல்லூரிக்கு அனுப்பி உயர் கல்வி பயில துணை நிற்கும் பெற்றோர்கள் தலை நிமிர்ந்து வாழ்ந்திட மாணவர்கள் இலக்குடன் வினையாற்றி வெல்ல வேண்டும் என்றார்.

மேலும் இந்நிகழ்வில் தண்ணீர் அமைப்பின் லட்சுமி பங்கேற்றனர். என்.எஸ்.எஸ், தண்ணீர் மாணவர் மன்றம், பாலினமன்ற ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் வரவேற்புரையாற்றினார். அனைத்து மன்றப் பொறுப்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
இருதியக கோவிந்தன் நன்றி கூறினார். இந்நிகழ்வில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.