இன்னும் சில மணி நேரம்.. சந்திரனை தொட போகும் சந்திரயான் 2.. திக் திக் நிமிடங்கள் தொடங்கியது!

0
gif 1

சந்திரயான் 2 நாளை அதிகாலை 1.30 -2.30 மணிக்குள் நிலவில் தரையிறக்கப்பட உள்ளது. சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் நிலவில் இறங்கி ஆராய்ச்சிகளை செய்ய உள்ளது.

சந்திரயான் 2 கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. வெற்றிகரமாக நிலவை நோக்கி கட்சிதமாக சென்ற சந்திரயான் 2 இன்று நிலவில் தரையிறங்க உள்ளது.

இந்த வியத்தகு சாதனை மூலம் உலக விண்வெளி ஆராய்ச்சி அரங்கில் இஸ்ரோ மாஸாக காலரை தூக்கிவிட்டுள்ளது. பூமியை 22 நாட்கள் சுற்றிய சந்திரயான் நிலவை அடைய மொத்தம் 48 நாட்கள் எடுத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

gif 3

சந்திரயான் 2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. பொதுவாக இஸ்ரோ பெரிய திட்டங்களுக்கு மட்டுமே ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டை பயன்படுத்தும். இது கிரையோஜெனிக் எஞ்சின் கொண்ட ராக்கெட் ஆகும். இது முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எஞ்சின் ஆகும். சந்திராயன் 2 திட்டத்தை முடிக்க ஜிஎஸ்எல்வி ராக்கெட்டையும் சேர்த்து 940 கோடி ரூபாய்தான் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திராயன் 2ல் மூன்று முக்கியமான கருவிகள் அடங்கி உள்ளது. ஆர்பிட்டர் எனப்படும் நிலவை அதன் சுற்றுவட்டப்பாதையில் இருந்து ஆராயும் சாட்டிலைட் போன்ற கருவி ஒன்று. நிலவில் இறங்கி அதை சோதனை செய்யும் பிரக்யான் என்று அழைக்கப்படும் ரோவர் ஒன்று. இந்த ரோவரை தரையிறக்க உதவும் விக்ரம் என்ற லேண்டர் கருவி ஒன்று.

விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 முதலில் பூமியை சுற்றி வந்தது. சந்திரயான் 2 தனது சோலார் பேனல்களை திறந்துவிட்டு பூமியை 170 கிமீ தூரத்தில் இருந்து சுற்றி வந்தது. பூமியை நீள்வட்ட பாதையில் சுற்றி கொஞ்சம் கொஞ்சமாக இதன் சுற்றுவட்டப்பாதை அதிகரிக்கப்பட்டது.

சந்திரயான் 2 முதலில் பூமியை எதிர் கடிகார திசையில் சுற்றி வந்தது. நீள்வட்ட பாதையில் சந்திரயான் 2 சுற்றுவதன் மூலம் அதன் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. இதனால் நீள்வட்ட பாதையில் சுற்றி சுற்றி பூமியைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக சந்திரயான் 2 நகர்ந்து சென்றது.

சரியாக விண்ணில் ஏவப்பட்ட 23 நாள் கழித்து பூமியில் இருந்து சந்திரயான் 2 ஆனது 45000 கிமீ தூரத்திற்கு சென்றது. அப்போது சரியாக சந்திரயான் 2 பூமியின் வட்டப்பாதையில் இருந்து வெளியேற்றப்பட்டு, நிலவை நோக்கி அனுப்பப்பட்டது. சந்திரயான் 2ல் உள்ள எஞ்சின் ஒன்றை ஆன் செய்து இது நிலவை நோக்கி அனுப்பப்பட்டது.

gif 4

சந்திரயான் 2ல் எஞ்சின் ஆன் செய்யப்பட்ட பின் அது நிலவை நோக்கி நகர தொடங்கியது. அதன்பின் சரியாக நிலவின் வட்டப்பாதையை சந்திரயான் 2 அடைந்தது. பூமியை எப்படி சந்திரயான் 2 எதிர் கடிகார திசையில் சுற்றியதோ அதேபோல் நிலவை சந்திரயான் 2 கடிகார திசையில் சுற்றியது. அதன்மூலம் நிலவிற்கு அருகில் சென்று அதன் வேகத்தை குறைத்துக்கொண்டது.

நிலவின் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி, நீள்வட்ட பாதையில் சுற்றி சந்திரயான் 2 நிலவிற்கு அருகில் கொஞ்சம் கொஞ்சமாக சென்றது. நிலவில் சரியாக வட்டப்பாதையை அடைந்தவுடன் சந்திராயனின் இருந்து ஆர்பிட்டர் எனப்படும் சாட்டிலைட் கழற்றி விடப்பட்டது. இதில் இருக்கும் விக்ரம் லேண்டர் தனியாக கழற்றிவிடப்பட்டது. கழற்றிவிடப்பட்ட ஆர்பிட்டார் நிலவை அடுத்த ஒரு வருடத்திற்கு சாட்டிலைட் போல சுற்றி தகவல்களை அனுப்பும்.

சந்திரயான் 2ல் உள்ள ஆர்பிட்டர் மிக சரியாக இயங்கி கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தற்போது விக்ரம் லேண்டரை தரையிறக்க வேண்டும். சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் நிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தவுடன் வேகமாக நிலவின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படும். இதனால் சந்திரயான் 2விற்கு எதிர் உந்து விசையை அளிக்க எதிர்புறத்தில் சில எதிர் திரஸ்டர் எஞ்சின்கள் இயக்கப்பட்டு அது நிலவில் மெதுவாக இறக்கப்படும்.

இது எதிர் திசையில் எஞ்சினை இயக்கி சந்திரயான் 2வின் வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைந்து விக்ரம் என்ற லேண்டர் கீழே இறங்கும். லேண்டரில் இருக்கும் ஏஐ சென்சார்கள் மூலம் நிலவில் தென் பகுதியில் எங்கே இறங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்படும்.

அதன்படி நாளை அதிகாலை 1 மணியில் இருந்து 2 மணிக்குள் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க தொடங்கும். 1.30 மணியில் இருந்து 2.30 மணிக்குள் விக்ரம் முழுமையாக கீழே இறங்கும். 5-6 மணிக்குள் பிரக்யான் அதில் இருந்து வெளியே வரும். பின் பிரக்யான் நிலவில் இறங்கி ஆராய்ச்சி செய்யும்.

விக்ரம் லேண்டரில் உள்ள பிரக்யான் ரோவர் வெளியே வந்து ஆராய்ச்சிகளை செய்வது மிக முக்கியமானது ஆகும். பிரக்யான் ரோவர் வெளியே உடன் சூரியனை நோக்கி தனது சோலார் பேனல்களை திறக்கும். இதன் மூலம்தான் இந்திய நேரப்படி 14 நாட்கள், அதவாது செப்டம்பர் 21 அல்லது 22 வரை பிரக்யான் ரோவர் இயங்கும்.

இந்த இரண்டும் 14 நாட்கள் ஆராய்ச்சி செய்யும். ஆர்பிட்டார் சேட்டிலைட் மட்டும் 1 வருடம் ஆராய்ச்சி செய்யும். விக்ரம் லேண்டரால் வேறு எங்கும் நகர்ந்து செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் விக்ரம் உள்ளே இருக்கும் ரோவர் ரோபோவான பிரக்யான் 500 மீட்டர் வரை நகர்ந்து செல்ல கூடிய திறன் கொண்டது.

சந்திரயான் 2 நிலவில் இறங்குவதை உலகமே கவனித்து வருகிறது. நிலவில் சந்திரயான்-2 தரையிறங்கும் நிகழ்வை காண்பதற்காக பிரதமர் மோடி பெங்களூரு வந்துள்ளார். பெங்களூர் இஸ்ரோ தலைமையகத்தில் இருந்து அவர் சந்திரயான் 2 நிலவில் இறங்குவதை காண்பார்.

 

 

 

 

 

 

 

 

 

 

gif 2

Leave A Reply

Your email address will not be published.