திருச்சி மாநகராட்சி 65 வார்டில் டெங்கு கொசு ஒழிப்பு பணியை ஆணையர் துவங்கி வைத்தார்.

0
Business trichy

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 65 வார்டு பகுதிகளில்  டெங்கு கொசு ஒழிப்பு பணியை  கோ- அபிசேகபுரம்  கோட்ட வளாகத்தில் மாநகராட்சி ஆணையர்    இரவிச்சந்திரன் 360 தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு  கொசு ஒழிப்பு பணிக்கு  தேவையான டார்ச்லைட், வாளி, அகப்பை, அபேட் மருந்து  மற்றும் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் கொடுத்து  இன்று (05.09.2019) துவக்கிவைத்தார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட  65 வார்டு பகுதிகளில்  டெங்கு நோய் வராமல் தடுக்க ஏதுவாக முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக வீடு வீடாக  சென்று டெங்கு நோயை உருவாக்கும் ஏடிஸ் கொசுக்களின் ஆரம்ப வளர்ச்சி நிலையான கொசுப்புழுக்கள் உள்ளதா  என ஆய்வு செய்து அதை அழிக்கவும், தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தவும், பொது மக்களுக்கு டெங்கு நோய் உருவாக்கும் கொசுக்களை கட்டுப்படுத்துவது குறித்து சுகாதாரக் கல்வி அளிக்கவும், தீவிர டெங்கு ஒழிப்பு பணிக்காக 18குழுவாக 20நபர்கள் என 360 தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.  மருத்துவர்கள் கண்காணிப்பில் இவர்கள் மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து கொசுப்புழு ஒழிக்கும் பணி, கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணி ஆகியவற்றில் ஈடுபடுத்தப்படுவார்கள். பொது மக்கள் தங்கள் வீடுதோறும் வரும் தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளர்களின் பணியை முழுமையாக செய்திட பொது மக்கள் மிகுந்த ஒத்துழைப்பு அளித்து வேண்டும்.

MDMK

மேலும் பொது மக்கள் அனைவரும், தங்கள் வீடுகள், அரசு மற்றும் தணியார் அலுவலகங்கள், வணிக வளாகங்கள், கொசுப்புழு உருவாக ஏதுவான பொருட்களான உபயோகமற்ற டயர்கள், பிளாஸ்டிக் கப்புகள், தேங்காய் சிரட்டைகள், இளநீர் கூடுகள், உடைந்த பூஞ்சாடிகள், உடைந்த மண்பாண்டங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் அவற்றை மாநகராட்சி துப்புரவு பணியாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.  அதுபோல் தங்கள் வீடுகளில் உள்ள மேல்நிலை மற்றும் கீழ்நிலை தொட்டிகளை வாரம் ஒருமுறையாவது ப்ளிச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்தல் வேண்டும். பொது மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள குளிர்சாதனப் பெட்டிக்கு பின்புறம் உள்ள தண்ணீர் சேகரமாகும் இடத்தை வாரம் ஒருமுறை வியாழக்கிழமை தோறும் சுத்தம் செய்ய வேண்டும். வாரந்தோறும் வியாழக்கிழமை டெங்கு தினமாக அனுசரிக்கப்படுகிறது. மேற்கூறிய வழிகாட்டுதல்களை பின்பற்றி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில் டெங்கு நோயை வராமல் தடுத்திட பொது மக்கள் மிகுந்த ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

Kavi furniture

இந்நிகழ்ச்சியில் நகர்நல அலுவலர்  டாக்டார்.அ.ஜெகநாதன்,உதவி ஆணையர் சி.பிரபாகரன், சுகாதார அலுவலர் ஆர்.இனங்கோவன் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டார்கள்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.