திருச்சியில் 14 வயது மனநலம் குன்றிய சிறுமியை 7 மாதமாக சீரழித்த திமுக பிரமுகர் உட்பட 4 பேர் கைது..

0
Business trichy

திருச்சி: 14 வயது மனநலம் குன்றிய சிறுமியை திமுக பிரமுகர் உட்பட 4 பேர் 7 மாதங்களாக தொடர்ந்து நாசம் செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. புலிவலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவள் மனநலம் குன்றியவள். பெற்றோர் கூலி வேலை செய்கிறார்கள். அதனால் படிக்க வைக்க முடியவில்லை. இவர்கள் வேலைக்கு சென்றுவிட்டால் சிறுமியை கவனிப்பது அவளது தாத்தாதான். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி கர்ப்பமாக இருப்பது தாய்க்கு தெரிய வந்ததையடுத்து அவர் அதிர்ச்சி ஆனார்.

அதனால் பக்கத்தில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிறுமியை அழைத்து சென்றிருக்கிறார். ஆனால் அரசு ஆஸ்பத்திரிக்கு மகளை அழைத்து செல்லுமாறு அங்கு சொல்லி உள்ளனர் இதையடுத்து, அங்கு சென்று டாக்டர்களை பார்த்ததில், சிறுமி 6 மாதம் கர்ப்பமாக உள்ளது உறுதி செய்யப்பட்டது.

இந்த விஷயம் உடனடியாக போலீசுக்கும், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பல திடுக் தகவல்கள் வெளியானது.

loan point
web designer

57 வயது பால்காரன் முத்து, 51 வயது டீக்கடைக்காரர் செல்வராஜ், 45 வயது ராமராஜ் மற்றும் பேரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவராக 2 முறை பொறுப்பு வகித்த திமுகவை சேர்ந்த 49 வயது செல்வராஜ் ஆகிய இந்த 4 பேரும்தான் சிறுமியை சீரழித்துள்ளனர். இது கடந்த 7 மாதமாகவே தொடர்ந்து நடந்துள்ளது. இப்போது அவள் 6 மாத கர்ப்பமாக இருக்கிறாள்.

nammalvar

இதில் செல்வராஜ், திமுக ஊராட்சி மன்ற பகுதி பொறுப்பாளர் ஆவார். மேலும் திமுக மாவட்ட விவசாய அணியிலும் உள்ளார். இதையடுத்து, இந்த 4 பேரும் போலீஸ்காவலில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இதைதவிர வேறு யாரோ 3 பேர் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்திருக்கிறார்கள். அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்த 4 பேருமே எப்படி தாத்தாவின் பாதுகாப்பை மீறி சிறுமியை பலாத்காரம் செய்ய முடிந்தது என்று தெரியவில்லை. தொடர்ந்து 7 மாதங்கள் இது நடந்துள்ளது என்றால், தாத்தாவும் இதில் உடந்தையா, அல்லது அவருக்கே தெரியாமல் இந்த கொடுமை நடந்து வந்ததா தெரியவில்லை. எனினும் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.