திருச்சியில் பள்ளி முன்பு தர்ணா பண்ணின மாணவிகளை மிரட்டிய ஆசிரியர் .

0
1 full

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள அன்னை ஆசிரம் பள்ளி மாணவிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி வாயிலில் முன்பு அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.

திருச்சி விமானநிலையம் அருகே வினோபா நகரில் உள்ள அரசு உதவி பெறும் அன்னை மேல்நிலைப்பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் போதிய அடிப்படை வசதி இல்லை என மாணவிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், புதன்கிழமை 04.09.2019 காலை பள்ளி நிர்வாகத்தை கண்டித்து 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகள் 42 பேர் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த பள்ளியில் உள்ள ஆசிரியர் ஒருவர் தீடிர் என வெளியே மாணவிகளிடம் உள்ள வரீங்களா இல்லையா என்று கோபமாக கத்த அங்கே சுற்றி இருந்த போலிசார் அந்த ஆசிரியரிடம் இந்த குழந்தைகளிடம் என்ன பிரச்சனை என்று கேட்காமல் இப்படி கோபமாக எங்கள் முன்பே மிரட்டினால் தனியாக சிக்கினால் என்ன பண்ணுவீகள் என்று கேட்க ஆசிரியர் .. நீங்க உங்க பிள்ளைங்களோட ஆசிரியராவே, பெற்றோரா இருந்து பாருங்கள் என்று சொல்லி கொண்டே விருட் என பள்ளியின் உள்ளே நுழைந்தார்.

2 full

இதையறிந்த பொன்மலை காவல் உதவி  ஆணையர் சுந்தரமூர்த்தி மற்றும் பள்ளி ஆசிரியைகள், மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனாலும், போராட்டத்தை கைவிட மாணவிகள் மறுத்துவிட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர் சின்னதுரை மாணவிகளிடம் கோரிக்கை குறித்து கேட்டார்.

அப்போது மாணவிகள் மீது பழி வாங்கும் நடவடிக்கையை பள்ளி நிர்வாகம் கைவிட வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சில மாணவிகளின் கல்வி உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளி கட்டடம், கழிவறையில் போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். இலவச மடிக்கணினி பெற்று தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மாணவிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எங்களுக்கு மடிக்கணினி கொடுக்க வில்லை என்று மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுத்தோம். அப்போது இருந்தே திட்டமிட்டு பள்ளியின் ஆசிரியர்கள் எங்களை பழிவாங்கும் நோக்கோடு நடந்து கொள்கிறார்கள் என்று மாணவிகள் தரப்பில் இருந்து புகார் சொல்லப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாணவிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சின்னதுரை உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை மாணவிகள் கைவிட்டு கலைந்துச் சென்றனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.