திருச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பொம்மை வீடு உருவாக்கும் போட்டி: காவல்துறை அழைப்பு

0

குழந்தைகள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பொம்மை வீடு உருவாக்கும் போட்டியில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு திருச்சி சரக காவல் துறை அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
குழந்தைகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தவும், புதிதாக ஒரு செயலை சிந்தித்துச் செயல்படுத்தவும், அருகில் உள்ள காவல் நிலைய அதிகாரிகளை நண்பர்களாக்கிக் கொள்ளவும், குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணரவும் பொம்மை வீடு, காவல் நிலையம் உருவாக்கும் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

food

இந்தப் போட்டியில் சிறிய அளவிலான வீடு போன்ற அமைப்புடன் கூடிய கட்டடத்தையோ, அலுவலக அமைப்பு மாதிரியான கட்டடத்தையோ மாதிரியாக உருவாக்க வேண்டும். இந்த மாதிரி வடிவமைப்பானது குழந்தைகள் தயக்கமின்றி விளையாடுவதற்கான வசதியாக இருத்தல் அவசியம்.
10 வயதுக்கு மேல் 23 வயதுக்குள்பட்ட ஆண், பெண் இருபாலரும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். குழுவாக இணைந்து பொம்மை வீடு மற்றும் காவல் நிலைய மாதிரிக் கட்டடத்தை வடிவமைக்க வேண்டும். இந்த மாதிரி கட்டடத்தில் கூர்மையான முனைகள், ரசாயன பூச்சு, ஆபாசமான மற்றும் தரக்குறைவான படங்கள் இடம் பெறக் கூடாது. மின் இணைப்பு இல்லாமல் மரத்தாலோ, துணியாலோ, அட்டைப் பெட்டியாலோ செய்யப்பட்டிருக்க வேண்டும். சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பொருள்களில் வடிவமைக்கப்பட வேண்டும். ஒரு குழுவில் குறைந்தபட்சம் ஒரு நபர் அதிகபட்சம் 3 பேர் இருக்கலாம். உருவாக்கிய மாதிரி கட்டடத்தை வரும் 19ஆம் தேதி மாலை 6 மணிக்குள் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

சமர்ப்பிக்கப்பட்ட மாதிரிகள் காவல்துறை மூலம் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட மாதிரிகள் திருச்சி ஆயுதப்படை திருமண மஹாலில் வரும் 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியில் இடம்பெறும்.

இந்த கண்காட்சியை தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் பார்வையிட்டு வாக்களிக்கலாம். அதிக வாக்குகளை பெறும் மாதிரி கட்டடத்துக்கு ரூ. 5 ஆயிரம் பரிசு வழங்கப்படும். மாதிரி கட்டடத்தை உருவாக்க அமைக்கப்பட்ட குழு, உறுப்பினர்கள் விவரம், செல்லிடப்பேசி எண்களை குறிப்பிட்டு வரும் 7ஆம் தேதிக்குள் d‌i‌g‌t‌r‌i​c‌h‌y‌r​a‌n‌g‌e@‌g‌m​a‌i‌l.​c‌o‌m என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும், விவரங்களுக்கு 98424-62821, 99659-88621 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.