தண்ணீர் திறக்க சொல்லி வாய்க்காலில் இறங்கிய திருச்சி விவசாய பெண்கள் !

0
D1

தண்ணீர் திறக்க சொல்லி வாய்க்காலில் இறங்கிய திருச்சி விவசாய பெண்கள் !

 

திருச்சி அருகேயுள்ளது ராம்ஜிநகர். இப்பகுதியில் உள்ள வண்ணான்கோயில் உள்ளிட்ட பகுதி விவசாய நிலங்கள் 2 ஆம் நம்பர் வாய்க்கால் மூலம் பாசனம் பெற்று வருகின்றன. இந்த வாய்க்காலுக்கு கட்டளை மேட்டுவாய்க்கால் மூலம் தண்ணீர் வருகிறது. இந்நிலையில் காவிரியில் தண்ணீர் வந்து 20 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை இந்த 2 ஆம் எண் வாய்க்காலுக்கு தண்ணீர்  திறக்கப்படவில்லை. மேலும் இந்த வாய்க்கால் இதுவரை தூர் வாரப்படவும் இல்லை. இது குறித்து அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நாற்று விட முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

N2

D2

இப்பகுதியில் குறுவை மற்றும் சம்பாவுக்கு நாற்று விடுவது, சோளம், மற்றும் தோட்டப்பயிர்களும் சாகுபடி செய்வது வழக்கம். தற்போது தண்ணீர் இல்லாததால் விவசாய நிலங்கள் வறண்டு கிடக்கின்றன. உழவுப்பணிகளை செய்ய கூட தண்ணீர் இல்லை. இதையடுத்து அப்பகுதி விவசாயிகள்,பொதுமக்கள் இன்று  காலை 10 மணியளவில் அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் இறங்கி  போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

N3

Leave A Reply

Your email address will not be published.