‘நாட்டின் பொருளாதார மந்த நிலையே பாஜக அரசின் தோல்விக்கு சான்று’- திருச்சியில் நெல்லை முபாரக்.

0
Full Page

திருச்சியில் எஸ்.டி.பி.ஐ.கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்களுக்கான கூட்டம் (செப்.03) அன்று நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அப்துல் ஹமீது, அச.உமர் பாரூக், மாநில துணைத் தலைவர் அம்ஜத் பாஷா, மாநில செயலாளர்கள் ரத்தினம், அகமது நவவி, அபுபக்கர் சித்திக், வழ. சஃபியா, மாநில பொருளாளர் வி.எம்.அபுதாஹிர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர்,செய்தியாளர்களிடம் எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறியது;இந்திய பொருளாதாரம் முன்னெப்போதும் கண்டிராத வகையில் மந்தநிலையை எதிர்கொள்கிறது என்பதை கிட்டத்தட்ட அனைத்து பொருளாதார தரவுகளும் சுட்டிக் காட்டினர். இந்த நிலைமைக்கு காரணம் மோடி அரசாங்கத்தின் தவறான பொருளாதார நடவடிக்கைகள் தான்.குறிப்பாக பண மதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி போன்ற மோசமான முடிவுகளின் நேரடி விளைவாகும்.ஆனால்
தற்போதைய பொருளாதாரத்தில் மந்தநிலை ஏதுவுமில்லை சர்வதேச அளவிலான ஒரு தேக்கமே நிலவிவருவதாக மத்திய நிதியமைச்சர் தெரிவிக்கிறார்.

Half page

நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் ஐந்தாண்டில் இல்லாத குறைவாக 5.8 சதவீதமாக சரிந்துள்ளது.நாட்டின் பொருளாதார தேக்கநிலை கவலை அளிப்பதாக முன்னாள் ரிசர்வ வங்கி கவர்நரும் பொருளாதார நிபுணருமான ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.
மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளதால் தான் தேக்க நிலையும், உற்பத்தி குறைப்பும் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் ஜி.எஸ்.டி. என்பதை மறுக்க முடியாது. வெறும் ரிசர்வ் வங்கி நிதியை பெற்று பெரு நிறுவனங்களுக்கு உதவி செய்வதால் மட்டும் எதுவும் நிகழ்ந்துவிடப்போவதில்லை. மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டும்.

காஷ்மீர் மக்களின் கருத்தை கேட்காமலேயே சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்திருப்பது ஜனநாயக படுகொலை.இதேபோல , அஸ்ஸாம் மாநிலத்தில் 19 லட்சம் மக்களை தேசிய குடிமக்கள் பதிவேட்டிலிருந்து நீக்கி இருப்பதும் ஜனநாயக விரோதம். உச்ச நீதிமன்ற நேரடியாக கண்காணித்து அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைந்து நடத்திட வேண்டும் என்றார் அவர்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.