திருச்சியில் வி.ஜி.பி நிறுவன தலைவருக்கு பாராட்டு விழா !.

0

திருச்சியில் வி.ஜி.பி நிறுவன தலைவருக்கு பாராட்டு விழா !.

உலகின் 54 நாடுகளில் திருவள்ளுவருக்குச் சிலைகள் நிறுவி தமிழின் பெருமையைப் பரப்பி வரும் வி.ஜி.பி நிறுவனத் தலைவர் டாக்டர்.வி.ஜி.சந்தோசத்துக்கு திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம்,ஜெசி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி ஆகியவை சார்பில் பாராட்டு விழா திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு முன்னாள் அமைச்சர் ந.நல்லுசாமி தலைமை தாங்கினார்.முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கவிஞர் நந்தலாலா வாழ்த்தி பேசினார்.

food

ஜெசி மெட்ரிக் பள்ளி தாளாளர் எம்.பி.ஆர்.ஜேசு அடியான் அறிமுக உரையாற்றினார்.விழாவில் டாக்டர்.வி.ஜி.சந்தோசத்துக்கு கேடயம் வழங்கிப் பெருமைப்படுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து திருச்சியை சேர்ந்த கவிஞர்கள் குழந்தை ஈகவரசன், மரிய விசுவாசம்,ஜி.சண்முக குமார் ஆகியோருக்கு பொற்கிழியை வி.ஜி.சந்தோசம் வழங்கி ஏற்புரையாற்றினார்.

இவ்விழாவில் ஜெசி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இவ்விழாவில் கி.ஆ.பெ.வி.கதிரேசன், திருச்சி சேவியர்,பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் பால் தயாபரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவர் ஜவஹர் ஆறுமுகம் வரவேற்றார்.கவிஞர் ஸ்ரீராம் இறுதியில் நன்றி கூறினார்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.