என்னை பார்க்க சிபாரிசு உடன் வர கூடாது ! – ஆவின் சேர்மன் கார்த்திகேயன் !

0

தமிழ்நாடு அரசு பால் வளத்துறையும், திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமும் இணைந்து ஆவின் பால் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாகவும். பாலின் தரத்தை உயர்த்திட வேண்டிய அவசியம் குறித்தும் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் திருச்சியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் துணைத் தலைவர் தங்க பிச்சைமுத்து, நிர்வாகி குழு உறுப்பினர்கள், அதிகாரிகள் சரக்கு துணை பதிவாளர் ஜெயபாலன், மண்டல துணை இயக்குனர் (தனிக்கை) லோகநாதன், ஆவின் பொதுமேலாளர் நடராஜன், உதவி இயக்குனர் அருள்மொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து பால் உற்பத்தியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

‌சந்தா 1

கூட்டத்தில் திருச்சி ஆவின் பால் பண்ணை தினமும் மூன்று லட்சம் லிட்டருக்கு அதிகமாக பால் கொள்முதல் செய்யப்படுகிறது. உள்ளூர் தேவைக்காக ஒரு லட்சத்து 5 ஆயிரம் லிட்டருக்கும் மேலும். சென்னைக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் லிட்டரும். தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 15 ஆயிரம் ஆயிரம் லிட்டரும். பால் உபபொருட்கள் தயாரிக்க 20 ஆயிரம் ஆயிரம் லிட்டரும்.

வழங்கப்படுகிறது. என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் தற்போது பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்ட தன் காரணமாக பால் உற்பத்தியையும் பாலின் தரத்தையும் உயர்த்துவது அவசியமானது என்றும். கால்நடைகளுக்கு தரமான தீவனங்கள் மற்றும் தரமான பால் யார் கொடுக்கிறார்கள் என்று ஆராய்ந்து பார்த்து வாங்கினால் அவர்களும் வளருவார்கள். சொஸைட்டியும் வளரும் மேலும் அவர்களது வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திக் கொள்வார்கள் என்பது உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சந்தா 2

இந்த கூட்டத்தில் பேசி திருச்சி ஆவின் சேர்மன் கார்த்திகேயன் —

அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி என்ற 4 மாவட்டத்தை பத்தி மட்டும் பேசுவோம். இன்னும் 38 நாள் இருந்து 50 நாட்களுக்குள் எந்த பாக்கியும் இல்லாமல் பண்றதுக்காக தான் நான் வந்திருக்கேன்.

நா ஏதோ தினமும் காலையில் 10 மணிக்கு வந்துட்டு, 2 போன் பண்ணிட்டு, டீ சாப்டுட்டு, 11.30 மணிக்கு வீட்டுக்கோ என்னோட அரசியல் வேலைக்கோ , என்னோட பர்சனல் தொழிலையோ தனிப்பட்ட தொழிலை செய்வதற்கு வரல.

என்னோட 20 வருட அரசியலுக்கு முதல்வர் கொடுத்திருக்கிற இந்த பதவியை பயன்படுத்தி உற்பத்தியாளர்களுக்கு செய்யனும் சொல்லி தான். பாக்கியே இல்லாமல் உடனே கொடுப்பதற்கு செய்கிறேன். ஆனால் அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளும் பார்கணும், என்னன்னா ஒரு விசயம்னா நேரடியா பேசனும், நேரடியா பாக்கணும், பையன் அப்பாகிட்ட பேசுவான் எனக்கு ஸ்கூல் பேக் வேணும், பீஸ் கட்டணும்., ஜாமன்ரி பாக்ஸ் வேணும் கேட்பான், அதுக்காக நான் அப்பான்னு சொல்ல வரல, நேரடிய சேர்மனிடம் அணுகுவதில் தப்பில்லை,

தலைவர் அணுக முடியலன்னா செக்கரட்டரி இருக்காரு அவரு என்ன பண்ணும்.. சார் இப்படி இருக்குது என்ன பண்ணணும் கேக்கணும், இதுக்கு ரெக்கமண்டேஷன் யாரையும் கூட்டிகிட்டு வர வேண்டிய அவசியம் இல்ல, வரவும் கூடாது.

கடந்த சில நாட்களுக்கு முன்னாடி  20.08.2019 வரை போட்டாச்சுன்னு சொல்றோம். ஆனா ஒரு 3 சொசைட்டி இன்னும் போடலைன்னு சொல்றாங்க. அது என்னான்னு என்கிட்டையே நேரடியாக கேக்கலாம். பெரிய பணக்காரர்களின் பணங்களை வங்கிகள் சில சமயம் நிறுத்தி வைத்து அவர்கள் வட்டிக்காக வைத்திருப்பார்கள். அது மாதிரி நம்முடைய பால் உற்பத்தியாளர்கள் பணத்தை நிறுத்தி வைக்க கூடாது என்று வங்கிகளுக்கு அறிவுரை சொல்லியிருக்கிறேன். அதற்காக தான் அதற்கு தகுந்த மாதிரி இப்போ புதிதாக லெட்சுமி விலாஸ் வங்கியை மாத்தியிருக்கேன். அவர்களிடம் உற்பத்தியாளர்களுக்கு பணம் கொடுப்பதற்கு RTGS  முறையில் பால் பண்ணையிலே இருந்து பணத்தை மாற்றுவதற்கு அடுத்த நொடியே பணத்தை மாற்றுவதற்கு வழி ஏற்படுத்தி விட்டேன். என்று பரபரப்பாக பேசினார்..

Leave A Reply

Your email address will not be published.