உலக கடித தினத்தை முன்னிட்டு கணவன் மனைவிக்கு எழுதிய கடிதம்.

0
D1

உலக கடித தினத்தை முன்னிட்டு கணவன் மனைவிக்கு எழுதிய கடிதம்.

உலக கடித தினம் என்பது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் ரிச்சர்ட் சிம்கின் என்பவரால் 2014-ஆம் ஆண்டு கொண்டு வரபட்டதாகும்.

N2

பல தலைவர்கள் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கடிதங்கள் இன்று வரலாறாக போற்றக் கூடியதாக அமைந்துள்ளது.
நவீன காலங்களில் வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், ஈமெயில், செல்பேசி என அனைத்து வசதிகளை நவீன தொழில்நுட்பம் வழங்கினாலும் ஒரு மனிதன் தனது உணர்வுகளை வெளிப்படுத்தும்போது அக்கடிதம் பல்வேறு விஷயங்களை உணர்த்துகின்றது.

D2

பழங்காலத்தில் ஓலைகளில் எழுதி உள்ளார்கள் .
புறாவின் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்கள். குதிரைகளில் ஆட்களை அனுப்பி கடிதம் அனுப்பி உள்ளார்கள் என செய்திப் பரிமாற்றத்தில் கடிதம் பல்வேறு விஷயங்களை கொண்டு உள்ளது .
அது மட்டுமல்ல தற்போது சுடு மண் பாத்திரங்களில் எழுதியுள்ள பிராமி எழுத்து நமது தொன்மை காலங்களை இன்றளவும் எதிரொலிக்கின்றது. செப்புத்தகடுகள் எழுதியுள்ள விஷயங்களும் பல்வேறு வரலாற்றினை நினைவுக்குக் கொண்டு வருகின்றது.
அதனால் தற்போது ஹாபிஸ் அமைப்பு மூலமாக கணவர் மனைவிக்கு கடிதம் எழுதும் நிகழ்ச்சியை திருச்சியில் உலக கடித தினத்தில் தமிழகத்தில் முதன்முறையாக நடத்தியது.

திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு உள்ளஅஞ்சல் பெட்டியில் ஹாபீஸ் அமைப்பு நிறுவனர் மதன், விஜயகுமார், தாமோதரன், நாசர் லால்குடி விஜயகுமார் உட்பட பலர் அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதி தபால் பெட்டியில் செலுத்தினார்கள்.

N3

Leave A Reply

Your email address will not be published.