வரப்போகுது மெட்ரோ ரயில் திருச்சியில்…

0
1 full

தமிழகத்தில் சென்னை, கோவைக்கு அடுத்தப்படியாக திருச்சி, மதுரை, நெல்லை போன்ற நகரங்களில் சிறிய ரக மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

நாட்டின் பெருநகரங்களில் பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்த மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப் படுகிறது. சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் இரண்டு வழித்தடங்களில் 42 கி.மீ.யில் செயல்பாட்டில் உள்ளது.

இரண்டாம் கட்டமாக மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகள் துவங்கப் பட்டுள்ளன. சென்னையை தொடர்ந்து கோவையில் மெட்ரோ ரயில் சேவையை துவங்குவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளன. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேற்பார்வையில் இப்பணிகள் நடக்கின்றன. இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களுக்கும் மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

2 full

இதற்காக ‘மெட்ரோ லைட்’ எனப்படும் புதிய வழிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது: பெருநகரங்களில் இயக்கப்படுவதை விட நீளம் குறைந்த மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான புதிய வரைமுறைகளை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. இதில் சிறிய அளவில் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கான மாதிரி வடிவமைப்புகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அளித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் முதல்கட்டமாக திருச்சி, மதுரை, நெல்லை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

3 half

Leave A Reply

Your email address will not be published.