திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் மிதிவண்டிகள் வழங்கினார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தினை உயர்த்தும் நோக்கில் தங்கள் வீடுகளில் சரியான முறையில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு மற்றும் வீடுகளில் உற்பத்தியாகும் மக்கும் குப்பைகளை வீடுகளிலேயே உரமாக்கும் திட்டத்தினை செயல்படுத்தி மாநகராட்சி வாட்ஸ் ஆப் எண்.8300113000 ல் புகைபடத்துடன் பதிவு செய்தவர்களை உதவிஆணையர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் வீடுகளில் நேரடியாக பார்வையிட்டு சரியானமுறையில் அமைக்கப்பட்டவர்களை தேர்வுசெய்யப்பட்டது.
வீடுகளில் சரியான முறையில் மழை நீர் சேகரிப்புஅமைத்து மற்றும் உற்பத்தியாகும் மக்கும் குப்பைகளை வீடுகளிலேயே உரமாக்கும் திட்டத்தினை செயல்படுத்திய சர்வேஸ்ராஜ், நிவேதிதா கனிஷ்கா, சிதம்பரேஷ், அஸ்வின், பவித்ரா மற்றும் ஸ்ரீதர் ஆகிய ஏழு நபர்களுக்கு தலா ரூ.5500/- மதிப்புள்ள மிதிவண்டிகள் பரிசாக ஆணையர் இரவிச்சந்திரன் இன்று (31.08.2019) மாநகராட்சி மைய அலுவலகத்தில் வழங்கினார்.

மேலும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தினை உயர்த்தும் நோக்கில் தங்கள் வீடுகளில் சரியான முறையில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தும் பள்ளி மாணவர்களில் வாரந்தோறும் தலா 5 மாணவர்கள் தேர்வு செய்தும் மற்றும் தினசரி வீடுகளில் உருவாகும் மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக்கும் அமைப்பை ஏற்படுத்தும் பள்ளி மாணவர்களில் வாரந்தோறும் தலா 5 மாணவர்கள் தேர்வு செய்தும் ஆக மொத்தம் 10 மாணவர்களுக்கு வாரந்தோறும் ரூ.5500/- மதிப்புள்ள மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது. இதற்கு மாணவர்கள் தங்களது இல்லத்தில் மழை நீர் சேகரிப்பு மற்றும் வீட்டிலேயே உரம் தயாரிக்கும் விபரத்தை ஒவ்வொறு வாரமும் வியாழக் கிழமைக்குள் மாநகராட்சி வாட்ஸ் ஆப் எண்.8300113000ல் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதனை மாநகராட்சி அலுவலர்கள் சரிபார்த்து பிரதி வெள்ளி கிழமை அன்று தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் அல்லது சம்பந்தப்பட்ட கைபேசி எண்களுக்கு தெரிவிக்கப்படும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஒவ்வொறு சனி கிழமை அன்றும் மிதிவண்டிகள் வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
இந்கழ்ச்சியில் செயற் பொறியாளர் சிவபாதம், உதவி ஆணையர்கள் தயாநிதி,வைத்தியநாதன், பிரபாக மற்றும் திருஞானம் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
