வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் திருச்சி ஆடிட்டர் உள்பட 3 பேருக்கு 2 ஆண்டுகள் தண்டனை

0
Business trichy

போலி ஆவணங்கள் முலம் 9 கோடியே 40 லட்சம் மோசடி

திருச்சி வங்கி ஆடிட்டர் உள்பட 3 பேருக்கு 2 ஆண்டுகள் தண்டனை.

Image

திருச்சியில் தனியார் வங்கியில் போலி ஆவணங்கள் கொடுத்து 9 கோடியே 40 லட்சம் மோசடியாக கடன் பெற்ற வழக்கில் வங்கி ஆடிட்டர் உள்பட 3 பேருக்கு 2 ஆண்டுகள் தண்டனை.

Rashinee album

பிரபல தனியார் வங்கியான விஐயா வங்கியில் கடந்த 2007 ஆம் ஆண்டு கொளதமன் மற்றும் மகேந்திரன், சகோதரர்கள் இணைந்து புதுக்கோட்டை சாலையில் சங்கம் ஆர்கானிக் கெமிக்கல் லிமிடெட் என்ற கம்பெனி அமைக்க விஐயா வங்கியில் 9 கோடி 40 லட்சம் கடன் பெற்றனர்.

தனியார் வங்கியில் ஆடிட்டிங் நடத்தும் போது பொய்யான ஆவணங்கள் காட்டி கடனை பெற்றதும், அதற்கு வங்கி ஆடிட்டர் கணேசன் போலியான ஆதாரங்கள் என்று தெரிந்து உதவியதும்  கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்த வங்கியின் தலைமை அலுவலகத்தில் சார்பில் சிபிஐ அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு. இந்த வழக்கில் 27 பேரிடம் விசாரனை நடத்தினர் 40 ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கடன் பெற விஐயா வங்கியின்; ஆடிட்டர் கணேசன் உதவியது. மேலும் சகோதரர்கள் கொளதமன், மகேந்திரன், ஆடிட்டர் கணேசன் உள்பட மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி எஸ். கிருபாகரன் மதுரம் தீர்ப்பு வழங்கினார். ஒரு நபருக்கு 20 ஆயிரம் வீதம் மொத்தம்  80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இம்முன்று நபர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை.

திருச்சியில் மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Ukr

Leave A Reply

Your email address will not be published.