திருச்சி ராணுவ தளவாட தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு!

திருச்சியில் செயல்பட்டு வரும் ராணுவ தளவாட தொழிற்சாலையில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. பட்டயப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விபரம் பின்வருமாறு:
நிறுவனம்: இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலை
அமைப்பு: மத்திய அரசு
துறை: HRD
பணியிடம்: திருச்சி
காலியிடங்கள்: 86

பணி 1: டிப்ளமோ பிரிவு
தொகுப்பூதியம்: மாதம் 3,542 ரூபாய்
துறைகள்: மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், சிவில், ECE, EEE, கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்
தகுதி: பட்டயப்படிப்பில் தேர்ச்சிப் பெற்று 3 ஆண்டுக்குள் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
பணி 2: பட்டப்படிப்பு பிரிவு
தொகுப்பூதியம்: மாதம் 4,984 ரூபாய்
துறைகள்: மெக்கானிக்கல், ECE, EEE, EIE
கூடுதல் தகுதி: பெறியியல் துறையில் பட்டம் பெற்று 3 ஆண்டுக்குள் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுயவிபரங்கள் கொடுத்து பதிவு செய்ய வேண்டும். செப்டம்பரம் மாதம் 25ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். அப்போது விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் கல்விச்சான்றிதழ், மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, அசல் அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.
சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பின்னர், விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் ரேங்க் பொறுத்து, அடுத்தக்கட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு ராணுவ தளவாட தொழிற்சாலையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்:
http://boat-srp.com/wp-content/uploads/2019/08/ofd.pdf
