திருச்சி தினத்தந்தி புதிய பிரிண்டிங் வளாகத்தில் பயங்கர தீ!

0
Full Page

திருச்சி தினத்தந்தி புதிய பிரிண்டிங் வளாகத்தில் பயங்கர தீ!

பத்திரிகை உலகில் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுவதில் முன்னோடியாக உள்ள தினத்தந்தி நாளிதழ், ஜப்பானில் இருந்து அதிநவீன இயந்திரத்தை இறக்குமதி செய்துள்ளது. அதனை தினத்தந்தி குழும நிர்வாக இயக்குனர் பாலசுப்ரமணிய ஆதித்தன் கடந்த மே 17ம் தேதி துவக்கி வைத்தார்.
பிராந்திய மொழிகளில் அதிக வாசகர்களை கொண்ட ஒரே நாளிதழ் என்ற பெருமை கொண்டது தினத்தந்தி… கோடிக்கணக்கான வாசகர்களை பெற்ற தினத்தந்தி, பத்திரிகை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்து வருகிறது.
புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வருவதிலும் முன்னோடியாக இருக்கிறது தினத்தந்தி நாளிதழ்.  திருச்சியில் அதிநவீன இயந்திரம் ஒன்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள ‘செய்கான் 77’ என்ற அதிநவீன அச்சு இயந்திரமானது ஒரு மணி  நேரத்தில் 70 ஆயிரம் பிரதிகளை எடுக்க கூடிய திறன் கொண்டது.
Half page
ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள ‘செயிகென் 450’ என்கிற புதிய அச்சு இயந்திரமானது பல அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது. இந்த இயந்திரத்தில் ஒரே நேரத்தில் 20 பக்கங்களை அச்சிடும் வசதி உள்ளது. ஒரு மணி நேரத்தில் 40 ஆயிரம் பிரதிகள் அச்சிட முடியும். அனைத்து பக்கங்களிலும் பல வண்ணங்களில் அச்சடிக்க கூடிய வசதியும் இந்த இயந்திரத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
.

திருச்சி தினத்தந்தி நாளிதழுக்கு திருச்சி- தஞ்சை சாலையில் துவாக்குடி சிப்காட் பகுதியில் புதிய அச்சகம் திறக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று 30.08.2019  மாலை 4.30 மணியளவில்  வெல்டிங் அடிக்கும் இடத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுஅதில் இருந்து தீ பரவி தீவிபத்து ஏற்பட்டது. இதில் பல இலட்சம் மமதிப்பிலான  பேப்பர் பண்டல்கள் நாசமானதாக கூறப்படுகிறது. புதிய இந்திரங்களில் தீ பரவி வருவதை

துவாக்குடி,நவல்பட்டு திருவெறும்பூர், உள்ளிட்ட இடங்களிலிருந்து சென்ற 20க்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இச்சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.