என் எண்ணமும் அதிகமாக தமிழ் மொழியைப் பற்றி தமிழ் வழி கல்வி பற்றி தான் – திருச்சியில் சகாயம் ஐஏஎஸ்

0
Business trichy

திருச்சி ஆர்.சி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட
தமிழ்நாடு அறிவியல் நகரம் இயக்குனர்சகாயம் ஐஏஎஸ் சிறப்புரையாற்றினார்.

அப்போது ஏழை எளிய மாணவர்கள் லட்சிய கனவு விடாமுயற்சியோடு வருங்காலத்தில் நான் என்ன ஆகவேண்டும் என்ற நினைவுகளோடு பயணம் செய்து வெற்றி அடையவேண்டும். நான் ஒரு ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவன் என்னுடைய பள்ளிக்கூட தலைமையாசிரியர் நாராயணசாமி நான் பள்ளி படிக்கும் பொழுதே வருங்காலத்தில் ஐஏஎஸ் ஆக வேண்டுமென்று ஊக்கப்படுத்தினார்.

web designer

எனது தந்தை அவருடன் மிதிவண்டியில் பயணம் செய்யும்போது புதுக்கோட்டை சுற்றி வரும்பொழுது அவருடன் பேசிக்கொண்டிருந்த பிறகு அவர் என்னை இந்த ஜில்லாவுக்கு கலெக்டராக வரவேண்டும் என கூறினார். அந்த லட்சிய கனவுகளோடு விடாமுயற்சியோடு படித்தது கலெக்டராக பணிபுரிந்து வருகிறேன்.

loan point

என்னுடைய பள்ளித் தலைமையாசிரியர் நாங்கள் பள்ளி பருவத்தில் நாங்கள் தமிழ் வழியில் பயின்ற காரணத்தினால் அவரை பெரிய வாத்தியார் என்று அழைப்போம் நான் தமிழ் வழியில் பயின்றாலும் தமிழ் மீது கொண்ட பற்றினால் தமிழ் மொழியில் என்னுடைய படிப்பை முடித்தேன் ஆங்கிலத்தை சிறப்பாக பேசுவதற்கு காரணம் என்னவென்றால் அதை சிறப்பான பேச்சு மொழியாக எடுத்துக்கொண்டேன். பேசப் பழகிக் கொண்டேன்.

nammalvar

ஆகவேதான் உங்களைப் போன்ற தமிழ் வழியில் படிக்கக்கூடிய மாணவர்களிடம் ,பேசுவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் என் எண்ணமும் அதிகமாக தமிழ் மொழியைப் பற்றி தமிழ் வழி கல்வி பற்றி மிகுந்த அக்கறையுடன் பேசுவேன் ஆசிரியர்கள்தான் அறிவியலாளர்களை அறிஞர்களை உருவாக்குவார்கள் ஆட்சியாளர்கள் திட்டங்களையும் சட்டங்களையும் உருவாக்குவார்கள் இதற்கு மேலாக ஆசிரியர்களே அனைவரையும் உருவாக்கி சமுதாயத்திற்கு நல்ல ஈடுபாடு உள்ள மாணவர்களை கொடுப்பவர்கள் ஆகவே உங்கள் பள்ளி ஆசிரியர்களை மாணவர்களாகி நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் ஆகவே உங்கள் லட்சிய கனவு வோடு பயணம் செய்யுங்கள் என கூறினார். நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமையாசிரியர் அருட்பணி சின்னப்பன், உதவி தலைமையாசிரியர் லூர்து சகாயராஜ்,மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள்  ஆகியோர் கலந்துக்கொண்டனர். மேலும்   இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டினை பள்ளியின் செய்தித்தொடர்பாளர் லூயிஸ் செய்திருந்தார்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.