பிக்பாஸ் கவின் குடும்பத்தினர் மோசடி வழக்கில் சிறை – திருச்சி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

0
gif 1

பிக்பாஸ் கவின் குடும்பத்தினர் மோசடி வழக்கில் சிறை – திருச்சி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

தமிழ் சின்னத் திரையுலகில் கதாநாயகனாகவும் காமெடி மன்னனாகவும் வளம் வந்துக்கொண்டிருப்பவர் கவின். இவரது வாழக்கை திருச்சியில் தொடங்கி பின்னர் விஐய் தொலைக்காட்சியில் சரவண மீனாட்சி எனும் குடும்ப நாடகத்தில் வேட்டையன் எனும் கதாநாயகனாக அறிமுகமாகி பிக்பாஸ் எனும் நிகழ்ச்சியில் நடித்துக்கொண்டு வருகிறார்.

 

gif 3
gif 4

திருச்சி கே.கே.நகரை சேர்ந்த சொர்ணராஐன் தமயந்தி ராணி ராஐலட்சுமி என்ற ராசி (கவின் தாயார் )  அருணாகிரிநாதன் ஐந்து பேர் கூட்டாக சேர்ந்து ஏலச் சீட்டு நடத்தினார். சீட்டுப்பணம் செலுத்தியவர்களுக்கு முதிர்வு பணம் திரும்ப கொடுக்காமல் பல லட்சம் மோசடி

 

இதன் மூலம் பாதிக்கப்பட்ட 29 பேரும் 06-03-2007 அன்று திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.  போலீசார்  சொர்ணராஜன், தமயந்தி,ராணி, ராஜலட்சுமி (எ ) ராஜீ என்கிற ( கவின் அம்மா ) அருணகிரி உள்பட 5 நபர்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தினர். திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் நீதிபதி S . கிருபாகரன் மதுரம் விசாரனை நடத்தினர். அப்போது தமயந்தி ராணி ராஜலட்சுமி ஆகிய 3 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் வழங்கப்பட்டது.

 

பாதிக்கப்பட்ட 29 நபர்களுக்கு தலா 1 லட்சம் மற்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து தலா 7.5 சதவீதம் வட்டியுடன் 26 லட்சத்தி 10 ஆயிரம் என மொத்தம் 55 லட்சத்தி 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவில்லை என்றால் அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

 

gif 2

Leave A Reply

Your email address will not be published.