குளிக்க சென்ற கால்நடை டாக்டர்  காவிரி ஆற்றில் மூழ்கி பலி

0
Full Page

குளிக்க சென்ற கால்நடை டாக்டர்  காவிரி ஆற்றில் மூழ்கி பலி

 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் இ.பி.காலனியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 38). இவர் நாமக்கல் மாவட்டம் வகுரம்பட்டி கால்நடை மருந்தகத்தில் கால்நடை உதவி மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 24-ந்தேதி மாலை தனது நண்பர்களுடன் தொட்டியம் அருகே உள்ள சீலைப்பிள்ளையார் புதூர் காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றார்.

 

 

ஆற்றில் குளித்தபோது குணசேகரன் சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார். இதனால் உடன் வந்த நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி தீயணைப்பு துறை வீரர்கள், குணசேகரனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரமானதால், மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் ஆற்றில் தேடினர். ஆனால் குணசேகரன் உடல் கிடைக்கவில்லை.

 

Half page

உடல் மீட்பு

 

3-வது நாளான  26.08.2019 அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அன்று மாலை சீலைப்பிள்ளையார் புதூர் காவிரி ஆற்றில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள புதர் அருகே குணசேகரன் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருடைய உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

 

இது குறித்து தகவல் அறிந்த காட்டுப்புத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, குணசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவிரி ஆற்றில் குளிக்க சென்ற கால்நடை டாக்டர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.