அன்பில் பொய்யாமொழி நினைவு நாள்.. ஸ்டாலின் அஞ்சலி

முன்னாள் எம்எல்ஏ அன்பில் பொய்யாமொழியின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதனையொட்டி திருச்சி கிராப்பட்டியில் உள்ள பொய்யாமொழியின் வீட்டிற்கு திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் இன்று வந்தார்.

அங்குள்ள பொய்யாமொழியின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரரும் எம்எல்ஏவுமான கே என் நேரு, எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். முன்னதாக சேலத்தில் இருந்து கார் மூலம் திருச்சி வந்த திமுக தலைவர் ஸ்டாலின் பின்னர் சென்னை புறப்பட்டு சென்றார்.
