வைக்கக்கூடாத இடத்தில் தங்கம்… ஆடைகலைந்து சோதனை… ரூ37,00,000 பறிமுதல்..!!

0

திருச்சி விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் ரூ37 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திருச்சி விமான நிலையத்தில்  சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமான பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரி பண்டாரம் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது திட்ட குடியைச் சேர்ந்த அன்பழகன் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த பழனியப்பன் உள்ளிட்டோர் சந்தேகிக்கும் வகையில் நடந்து கொண்டதால், அவர்களை  தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

food

Image result for உள்ளாடைக்குள் வைத்து தங்கம் கடத்தல்

அப்போது தங்களுடைய உள்ளாடைக்குள் 126 கிராம் எடை கொண்ட தங்கங்களை மறைத்து கடத்தியது தெரியவந்தது. அதேபோன்று துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த அகமது என்பவரிடமும் நடத்திய சோதனையில், உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த 250 கிராம் தங்கச் சங்கிலி மற்றும் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இத்தையடுத்து  விமானத்தில் தங்கம் கடத்தி வந்த 3 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

gif 4

Leave A Reply

Your email address will not be published.