இந்தத் தொகுதி முழுவதும் நகரப் பகுதியைக் கொண்டது. படித்த மற்றும் ஏராளமான அரசு ஊழியர்கள் இந்தத் தொகுதியில் வசிக்கின்றனர்.

மாநகராட்சியின் 39 முதல் 42 மற்றும் 44 முதல் 60 வரையிலான வார்டுகள் இந்தத் தொகுதியில் வருகின்றன.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம், மாநகராட்சி மைய அலுவலகம், அரசு தலைமை மருத்துவமனை, ரயில் சந்திப்பு என பல்வேறு மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் இதில் அடங்கும்.

இவை எல்லாவற்றையும்விட திருச்சி மேற்கு தொகுதியின் பிரதான அடையாளமாக மத்திய பஸ் நிலையத்தைக் குறிப்பிடலாம்.

நகரில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு முக்கிய காரணமாக மத்திய பஸ் நிலையம் அமைந்துள்ளதால், ஒருங்கிணைந்த பஸ் முனையம் அமைக்க வேண்டும் என்ற அனைத்துத் தரப்பு மக்களும் பல்லாண்டுகாக கோரி வருகின்றனர்.

1957 முதல் இதுவரை இந்தத் தொகுதியில் தலா 6 முறை திமுக, அதிமுக கட்சிகளும், 2 முறை கம்யூனிஸ்ட்டுகளும் வென்றுள்ளன.

நிகழ் அதிமுக ஆட்சியில் முதல் இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதி இது. 2011, ஏப்.13-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் திமுகவின் கேஎன்.நேருவை (70,313 வாக்குகள்) எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற என்.மரியம்பிச்சை (77,492 வாக்குகள்) சாலை விபத்தில் உயிரிழந்ததால் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

2011, அக்.13-ல் நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மு.பரஞ்ஜோதி (69,029) போட்டியிட்டு, 14,684 வாக்குகள் வித்தியாசத்தில் (நேரு 54,345) வெற்றி பெற்றார்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

திருச்சி (மாநகராட்சி) வார்டு எண்: 39 முதல் 42 வரை மற்றும் 44 முதல் 60 வரை

2011 – தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

மரியம் பிச்சை.N

அதிமுக

77492

2

நேரு.K.N

திமுக

70313

3

திருமலை.R

பாஜக

2569

4

செல்வம்.P

இந்திய ஜனநாயக கட்சி

1487

5

வெங்கடாசலம்

சுயேச்சை

475

6

இளங்கோ

பகுஜன் சமாஜ் கட்சி

407

7

மோகனரங்கன்.S

சுயேச்சை

295

8

முருகராஜன்.T

சுயேச்சை

282

9

பாலு.O (எ) பாலசுப்ரமணியன்

சுயேச்சை

223

10

முரளிதரன்.S

சுயேச்சை

156

11

பாலசுப்ரமணியன்.M

லோக சனசக்தி கட்சி

152

12

வாசுதேவன்

சுயேச்சை

145

13

அசோகன்.K

சுயேச்சை

134

14

சுகுமார்.R

சுயேச்சை

109

15

சரவணகுமார்.T

சுயேச்சை

82

154321

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2006 – தேர்தல் ஒரு பார்வை

 

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

நேரு கே.என்

திமுக

74026

2

மரியம் பிச்சை

அதிமுக

57394

3

செந்தூரேஸ்வரன்

தேமுதிக

14027

4

மதியரசன்

பாஜக

2413

5

இளங்கோவன்

பி.எஸ்.பி.

642

6

காஜா முகமது

சுயேச்சை

536

7

ரவிச்சந்திரன்

சுயேச்சை

289

8

பாலகிருஷ்ணன்

ஏ.பி.ஹெச்.எம்

184

9

மோகன்

சுயேச்சை

154

10

முருகன்

சுயேச்சை

154

11

முரளிதரன்

சுயேச்சை

112

மொத்தம்

149931

 

2016 சட்டமன்ற தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் திமுக சார்பில் மா.செ. கே.என்.நேருவும், அதிமுக சார்பில் கொறடா ஆர். மனோகரனும், தேமுதிக சார்பில் ஜோசப் ஜெரால்டும் பலப்பரீச்சை நடத்துகிறார்கள்.

கே.என்.நேரு செல்வாக்கு மிகுந்தராகவும், மனோகர் ஆளும்கட்சி, பணபலம் மிகுந்தவராகும், தேமுதிக ஜெரால்டு வித்தியாசம மக்களை கவர்ந்து பிரச்சாரம் என்று மூன்று முனைகளில் போட்டி நிலவுகிறது.