திருச்சியின் கூவமாக மாறி வரும் காவிரி

0
Full Page

திருச்சி: காவிரியாற்றில் புனித நீராட தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்சி வந்து செல்கின்றனர்.  அம்மாமண்டபம் படித்துறையில் திதி கொடுப்பதற்காக பொதுமக்கள் ஏராளமானோர் வருகின்றனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்ய வெளியூரில் இருந்து வரும் பக்தர்களும் காவிரியில் நீராடிவிட்டு செல்கின்றனர். திருச்சியை சுற்றியுள்ள கிராம கோயில்களின் விழாக்களுக்கு புனித நீரை காவிரியாற்றின் அம்மாமண்டபம் படித்துறையிலிருந்து எடுத்துச் செல்கின்றனர்.kaveri river

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையிலுள்ள புனிதமான காவிரியாற்றில் தற்போது திருச்சி சிந்தாமணி பகுதியில் இருந்தும்,ஸ்ரீரங்கம் பகுதியிலிருந்தும் சாக்கடை கழிவுநீர் கலக்கிறது. இது திருச்சியின் கூவமாக மாறி வருகிறது.Tamil-News

Half page

அம்மாமண்டபம் படித்துறை அருகே ஆற்றில் ஆங்காங்கே தேங்கியுள்ள தண்ணீரில் சாக்கடை கழிவு நீர் கலந்ததால் கடந்த சில வாரங்களுக்கு முன் ஏராளமான மீன்கள் செத்து மிதந்து அப்பகுதியே துர்நாற்றம் வீசியது. திதி கொடுக்க வரும் பக்தர்களும், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களும் முகம் சுழித்தபடி ஆற்றுநீரில் நீராடி சென்றனர். தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.revier

இப்பிரச்னைக்கு மாநகராட்சி நிரந்தர தீர்வு காண வேண்டும். புனிதமான காவிரியாற்றில் மாசு ஏற்படும் முன்னரே தடுக்கும் முயற்சியில் அரசு ஈடுபடாமல் ஆறு முழுவதும் மாசடைந்த பின் அதனை சுத்தம் செய்ய வேண்டுமானால், கங்கையை போல் பல கோடி ரூபாய் செலவிட நேரிடும். முதலிலேயே விழிப்புடன் இருந்து அதிகாரிகள் செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.