நேர்மையும் கண்ணியமும் மிக்க தொலைக்காட்சியின் திருச்சி ஒளிப்பதிவாளர்!

நீயூஸ் 18 தமிழ்நாடு திருச்சி ஒளிப்பதிவாளர்
வை சரவணகுமார் இன்றிரவு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, முன்னாள் ஆட்டோவில் சென்ற அரியலூர் ஜமீன் பானு தவற விட்டுச் சென்ற பையை எடுத்து, கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
அதில் ₹ 4.50 லட்சம் மதிப்புள்ள 15 பவுன் தங்க நகைகள் இருந்தன. அவற்றை தவற விட்டவர்களிடம் சரவணகுமார் முன்னிலையில் போலீசார் ஒப்படைத்தனர்.

சாலையில் கிடந்த பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த கண்ணியமிக்க ஒளிப்பதிவாளர் சரவணகுமாரை போலீசாரும் நகையின் உரிமையாளரும் மனதார பாராட்டி,
நன்றி சொன்னார்கள்.
பாராட்டுக்கள் சரவணகுமார்….
