திருச்சி நீதிமன்ற கட்டிடத்தின் 100-வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்.

0
D1

திருச்சி நீதிமன்ற வளாகத்தில்  மிகவும் பழமை வாய்ந்த முதன்மை செசன்சு கோர்ட் கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் கடந்த 1919ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் தெதி அப்போதைய நீதிபதி ஜே.ஜி.பர்ன் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது. இதற்கான கல்வெட்டு கட்டிடத்தின் முகப்பு பகுதியில் உள்ளது.

இதன் நூற்றாண்டு நிறைவு விழா கடந்த 17ம் தேதி கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கொண்டாடப்பட்டது.  சங்கத் தலைவர் ரமேஷ் நடராஜன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக செசன்ஸ் கோர்ட் நீதிபதி கே.முரளிசங்கர் கலந்து கொண்டு 100 கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டினார்.

D2
N2

100 ஆண்டுகள் பழமையானது என்றாலும் இக்கட்டிடம் மிகவும் வலுவானது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது.

மூத்த வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், சங்க செயலாளர் ராஜசேகரன் ஆகியோர் இக்கட்டிடத்தை தொல்லியல் துறை புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கையை விடுத்தனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, பெரியார், கருணாநிதி உள்ளிட்டோர் இங்கு வந்து கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றியுள்ளனர். இந்த கட்டிடத்தில் மீண்டும் செசன்ஸ் கோர்ட் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினர்.

விழாவில் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்கள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.    

N3

Leave A Reply

Your email address will not be published.