திருச்சி ஜம்போ சர்க்கஸ் சார்பில் ஜெனிட்டா ஆன்டோவிற்க்கு பாராட்டு விழா.

0
Full Page

திருச்சியில் ஜம்போ சர்க்கஸ் நிர்வாகத்தின் சார்பில் சர்வதேச சதுரங்க போட்டிகளில் 6 முறை தங்கம் வென்ற திருச்சி ஜெனிட்டா ஆன்டோவிற்க்கு பாராட்டு விழா நடைபெற்றது.

திருச்சி ஜி.கார்னர் மைதானத்தில் நடந்து வரும் ஜம்போ சர்க்கஸ் நிர்வாகத்தின் சார்பில் சர்வதேச சதுரங்க போட்டிகளில் 6 முறை தங்கம் வென்ற திருச்சியின் தங்கமங்கை ஜெனிட்டா ஆன்டோவிற்க்கு பாராட்டு விழா கடந்த 18-08-19 அன்று மாலை நடந்தது.

திருச்சி ஜி.கார்னர் மைதானத்தில் நடந்து வரும் ஜம்போ சர்க்கஸ் நிர்வாகத்தின் சார்பில் சர்வதேச சதுரங்க போட்டிகளில் 6 முறை தங்கம் வென்ற திருச்சி ஜெனிட்டா ஆன்டோவிற்க்கு மாநகர காவல்துறை துணை ஆணையர் நிஷா பரிசு வழங்கினார்.
Half page

இந்நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் (சட்டம் & ஒழுங்கு ) N.S. நிஷா I.P.S அவர்கள் கலந்து கொண்டு சதுரங்க விளையாட்டு வீராங்கனை ஜெனிட்டா ஆன்டோவிற்க்கு நினைவு பரிசை வழங்கி பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நுகர்வோர் மற்றும் சேவை சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் M.சேகரன் மற்றும் சமூக ஆர்வலர் ஆர்.ஏ.தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக சிறப்பு விருந்தினர்களை ஜம்போ சர்க்கஸ் சார்பில் அதன் மேலாளர் சுரேஷ் பாபு வரவேற்றார். நிகழ்ச்சியினை பேராசிரியர் சுகன்யா தொகுத்து வழங்கினார்.இந்நிகழ்சியின் ஏற்பாட்டை ஜம்போ சர்க்கஸ் உரிமையாளர் அஜய்சங்கர் செய்திருந்தார்.

டிக்கெட் முன்பதிவுக்கு: www.bookmyseats.in

Quarter page

Leave A Reply

Your email address will not be published.