புதிதாக 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை.. முதல்வர் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி? தகுதிகள்

0
Business trichy

புதிதாக 5 லட்சம் முதியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். எனவே முதியோர் உதவித்தொகை வாங்குவது என்பது யாருக்கெக்கலாம் சாத்தியம்.? எப்படி மற்றும் யாரை அணுகுவது என்பதை பார்ப்போம். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நேற்று சேலத்தில் முதல்வர் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் கூட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த குறைதீர் முகாம் தமிழகம் முழுவதும் அதிகாரிகளால் அவ்வப்போது நடத்தப்பட உள்ளது. இதுவரை நடந்த சிறப்பு கூட்ட குறைதீர் கூட்டத்தில் முதியோர் ஓய்பூதியத்திற்கான மனுக்கள் தான் அதிகம் வந்துள்ளதாக முதல்வல் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

 

மேலும் புதிதாக 5 லட்சம் முதியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். எனவே எனவே முதியோர் உதவித்தொகை வாங்குவது என்பது யாருக்கெக்கலாம் சாத்தியம்.? எப்படி மற்றும் யாரை அணுகுவது என்பதை பார்ப்போம். தமிழ்நாடு முதியோர் உதவித்தொகை திட்டம் என்ற ஒரு திட்டத்தினை 22.1.1962ம் ஆண்டில் தமிழக அரசு கொண்டுவந்தது. இந்த திட்டத்தில் ஆரம்பத்தில் 20 ரூபாய் நிதியுதவினை அரசு வழங்கியது.படிப்படியாக உயர்த்தி தற்போது மாதம் ரூ.1000 அரசால் வழங்கப்படுகிறது. தற்போது இத்திட்டம் இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவி தொகை திட்டம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. தற்போது தமிழகம் முழுவதும் சுமார் 15லட்சம் பேருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

 

விண்ணப்பிக்க யாருக்கு தகுதிகள்

Kavi furniture

60வயதை கடந்த ஆதரவற்ற ஆண் / பெண் ஆகிய இருவரும் தகுதியுடையவர்கள். இவர்கள் ஏழ்மை நிலையில் இருக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் மகன் / 18 வயதுக்கு மேற்பட்ட மகன் வழி பேரன் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் (விவாகரத்து நடந்த 5 ஆண்டுகள்) விதவை பெண்கள் (40வயது கடந்தவர்கள்) மாற்று திறனாளிகள் (60சதவீதம் ஊனம்) கண்பார்வை அற்றவர்கள். ஆதரவற்ற கண்பார்வையற்றவர்களுக்கு மற்றும் ஆதரவற்ற உடல் ஊனமுற்றோருக்கு வயது வரம்பில்லாமல் முதியோர் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

எப்படி விண்ணப்பிப்பது

MDMK

முதியோர் உதவித்தொகை படிவத்தின் படி விண்ணப்பிக்க வட்டாட்சியரிடம் வேண்டும். விண்ணப்பத்தில் முத்திரை கட்டண வில்லை எதுவும் ஒட்ட தேவையில்லை. மனுதாரரின் வயதுக்கு ஆதாரமாக வாக்காளர் பட்டியலை எடுத்துக்கொள்ளலாம்(அல்லது) அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய அல்லது அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலரிடம் வயது குறித்தான சான்று பெறலாம்.

 

வட்டாட்சியர் விசாரிப்பார்

உரிய விசாராணைக்குப் பின்னர் வட்டாட்சியர் முதியோர் உதவித்தொகை வழங்கிட உத்தரவிட்ட அதே மாதத்தில் முதல் தேதி முதல் உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் விண்ணப்பதாரருக்கு எழுத்து மூலம் தெரிவிக்கப்படும் இது குறித்து விண்ணப்பதாரர் மாவட்ட ஆட்சியரிடம் மேல் முறையீடு செய்யலாம். மாவட்ட ஆட்சியரின் முடிவே இறுதி முடிவு.

போட்டோ நகல்கள்

 

வட்டாட்சியர் உத்தரவிட்டவுடன் மனுதாரர் மூன்று புகைப்பட நகல்கள் எடுத்து வட்டாட்சியரிடம் கொடுக்க வேண்டும். உத்தரவில் புகைப்படம் ஒட்டப்பெற்று வட்டாட்சியரால் அத்தாட்சி செய்யப்பட்டு ஒரு நகல் மனுதாரருக்கும் ஒரு நகல் கிராம நிர்வாக அலுவலருக்கும் அனுப்பப்படும். ஒரு போட்டோ நகல் வட்டாட்சியர் அலுவலக பதிவேட்டில் ஒட்டப்பெற்று மனுதாரரின் கைரேகை அல்லது கையொப்பம் பெற்று வைக்கப்படும். அதன்பிறகு மாதம் மாதம் பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.