மணப்பாறை காவல் நிலையத்தில் நடிகர் பவர்ஸ்டார் ஆஜர்

0
1

கண்ணா லட்டு தின்ன ஆசையா, லத்திகா உள்ளிட்ட படங்களில் நடித்த பவர் ஸ்டார் சீனிவாசன், திருச்சி துறையூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் வரதராஜனிடம் 10 கோடி கடன் வாங்கித்தருவதாக கூறி 60  லட்சம்  கமிஷனாக பெற்றுள்ளார்.

பணம் திரும்ப கேட்ட போது ரூ. 30 லட்சம் பணமாகவும், ரூ.30 லட்சம் காசோலையாகவும் வழங்கினார். ஆனால் காசோலை பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது.

4

இது தொடர்பாக 2017-ல் 30 லட்ச ரூபாய் காசோலை மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பவர் ஸ்டாருக்கு ஆதரவாக மணப்பாறையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாண்டி கடந்த 2 ஆண்டுகளாக ஆஜராகி வாதாடினார்.

2

இதற்கான கட்டணத்தைக் கேட்டு பலமுறை போன் செய்தபோதும் பவர்ஸ்டார் போனை எடுக்கவில்லை. இதனையடுத்து கடந்த மே மாதம் 7ம் தேதி போனை எடுத்த பவர்ஸ்டார் ஆபாச வார்த்தைகளால் வக்கீலை திட்டியதுடன் பணம் தர முடியாது. உன்னால் முடிந்ததை பார்  என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வக்கீல் பாண்டி மணப்பாறை கோர்ட்டில் ஆடியோ ஆதாரத்துடன் புகார் செய்தார். அப்புகாரை பெற்றுக்கொண்ட மணப்பாறை போலீசார் நடிகர் பவர்ஸ்டார் மீது வழக்குப்பதிவு செய்தனர். தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இதனையேற்ற நீதிபதி ராஜமாணிக்கம் நடிகர் பவர் ஸ்டாருக்கு நிபந்தனை. ஜாமீன் வழங்கி கடந்த 3ம் தேதி உத்தரவிட்டார். அத்துடன் சம்மந்தப்பட்ட மணப்பாறை காவல்நிலையத்தில் தொடர்ந்து 3 நாட்கள் நேரில் ஆஜராகி போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதனால் நடிகர் பவர்ஸ்டார் நேற்று மணப்பாறை காவல்நிலையத்தில்  ஆஜராகி கையெழுத்திட்டார்.

3

Leave A Reply

Your email address will not be published.