திருச்சி செல்லம்மாள் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மைதானத்தில் தீடீர் மரணம்!

0
Full Page

திருச்சி செல்லம்மாள் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் தீடீர் மரணம்!

 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ளது அரசங்குடி. இங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் இரண்டு நாட்களாக வட்டார அளவிலான குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த  போட்டிகளில் கலந்து கொள்ள திருவெறும்பூர் அருகே உள்ள செல்லம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் அருண் சென்றிருந்தார். ஆண் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டியில் மாணவர்களை அழைத்து சென்றிருந்தார். அவர் இந்நிலையில் இன்று மைதானத்தில் அருண் டீ சாப்பிடுவதற்காக மதியம் கடைக்கு சென்றிருக்கிறார்.

 

Half page

டீ குடித்து விட்டு வண்டியில் ஏறி அப்படியே நெஞ்சு வலிக்கிறது. கீழே விழுந்திருக்கிறார். உடனே அவரை அரசங்குடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்ற போது அவர்  மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்து விட்டது என்று சொல்லவும் எல்லோரும் அதிர்ச்சியடைந்து விட்டனர் மைதானத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இது குறித்து நாம் விசாரிக்கையில் நேற்று பெய்த மழையினால் வட்டார அளவிலான குழு விளையாட்டு போட்டி இன்று நடக்குமா ? என்கிற சந்தேகம் இருந்த நிலையில் விளையாட்டு மைதானத்தை மாற்றி அமைக்கவும். விளையாட்டு போட்டிக்கு செல்லும் மாணவர்களுக்கு முன் கூட்டியே தேர்வு நடத்தி அழைத்தி சென்றிருக்கிறார் உடற்பயிற்சி ஆசிரியர் அருண். 

 

அருண் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பின்னந்தலை வலிக்கிறது என்று அம்மாவிடம் சொல்லியிருக்கிறார்.  பின்னந்தலை வலி அதிகமானதால் 19.08.2019 திருவரம்பூரில் உள்ள  மருத்துவரிடம் சென்று ஊசி போட்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கு அடுத்த நாளே அவருக்கு மரணம் ஏற்பட்டுள்ளது.

அருண் கடந்த 6 வருடங்களாக செல்லமாள் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக இருக்கிறார். இவருக்கு கல்லூரி நாட்களில் இருந்தே மதுவும் சிகரெட் பழக்கம் உண்டாம். எப்போதும் சிகரெட் அடித்துக்கொண்டே இருப்பாராம். கடைசியில் வளமான வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டிய 30 வயதில் தன்னுடைய தனிப்பட்ட பிரச்சனையில் சிக்கின குடிபழக்கம் கடைசியில் மாரடைப்பு ஏற்ப்பட்டு அவருடைய எதிர்காலத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

Quarter page

Leave A Reply

Your email address will not be published.