தரைக்கடை வியாபாரிகள் சங்க வாக்காளர் பட்டியலில் குளறுபடி

0
full

திருச்சி மாநகராட்சி ஶ்ரீரங்கம் கோட்டம் தரைக்கடை வியாபாரிகள் சங்கத் தேர்தலுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2 ஆயிரத்து 568 பேர் தரைக்கடை வியாபாரிகள். இதில் 2 ஆயிரம் பேருக்கு மேல் முகவரிகள் குறிப்பிடவில்லை. பெரும்பாலானவர்களின் தந்தை பெயர் குறிப்பிடவில்லை. அதனால் இப்பட்டியல் உண்மைதானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ukr

இது அரசியல் சதியே என அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்  தனது மனுவில் தரைக்கடை வைத்திருப்பவர்களை அப்புறப்படுத்த நடக்கும் சதியே இது என்றும் இதனால் சரியான பெயர் முகவரி  இல்லாததால் எங்களால் முறையாக தேர்தலுக்கு தயார் செய்ய இயலவில்லை எனவும். வாக்கு கேட்க முடியாத சூழ்நிலை உள்ளதாகவும்,  மேலும் பெயர் பட்டியலில் உள்ளவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு அடையாள அட்டை கொடுக்கவில்லை. அவசர கதியாக இப்பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அதனால் ;;தயவு செய்து இந்த பட்டியலை மறு ஆய்வு செய்ய வேண்டும். சரியான பெயர் பட்டியல் வெளியிட வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதன் நகல் ஆணையர் ரவிச்சந்திரனிடம் அளிக்கப்பட்டுள்ளது.

 

half 1

Leave A Reply

Your email address will not be published.