கவுரவ விரிவுரையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்

0
Business trichy

தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் சங்க மாநில அளவிலானஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

MDMK

மாநிலத்தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். மாணவர்களின் கல்வி நலன் கருதி கவுரவ விரிவுரையாளர்கள் பணிநிரந்தரம்  செய்ய வேண்டும். இந்த கல்வியாண்டு தொடங்கியும் விரிவுரையாளர்கள் பணிநிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. அதனை வழங்க வேண்டும். முதல் சுழற்சியில் 533 கவுரவ விரிவுரையாளர்கள் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புதிய படிப்புகளுக்கு விரிவுரையாளர்கள் தேவைப்படுவதை கருத்தில் கொண்டு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்பன போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுகுறித்து தங்கராஜ் கூறுகையில் 2 ஆயிரம் பேர் டி.ஆர்.பி. தேர்வு எழுதி தகுதி பெற்றுள்ளனர். பணிவாய்ப்பில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.. இந்த கோரிக்கைகளை ஏற்காத பட்சத்தில் கலந்து ஆலோசித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார். பொதுச் செயலர் வினோத், மாநில ஒருங்கிணைப்பாளர் பிரேம்குகமார், தங்க முனியாண்டி, ராமஜெயம், மகளிர் அணி மாநில செயலாளர் பிரிலியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Pranav city

Leave A Reply

Your email address will not be published.