திருச்சி அருகே கிணற்றுக்குள் பாய்ந்த மினி லாரி – 8 பேர் பலி

0
Full Page

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே திருமனூர் கிராமத்தில் சாலையோர கிணற்றில் டாட்டா ஏஎஸ் எனப்படும் மினி லாரி  கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

முசிறி அருகே பேரூர் கிராமத்தைச் சேர்ந்த 22 பேர் டாட்டா ஏஸ் வாகனத்தில் துறையூர் அருகே எஸ்.என் புதூர் என்ற கிராமத்தில் உள்ள கோவிலில் நடைபெறும் பூஜை நிகழ்ச்சி க்காக புறப்பட்டு சென்றனர்.

Half page

22 பேருடன் சென்ற இந்த வாகனம் துறையூர் அருகே புதூர் கிராமத்திற்கு பத்து கிலோமீட்டர் முன்பாக திருமானூர் கிராமத்தில் வந்த போது மினிலாரியின் டயர் வெடித்தால் வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் ஒரத்தில் தடுப்பு வேலியையும் உடைத்துக்கொண்டு கிணற்றிற்குள் பாய்ந்து விழுந்தது. இந்த விபத்தில் டாட்டா ஏசி வாகனத்தில் வந்த 22 பேரும் பலத்த காயமடைந்தள்ளனர். இவர்களில் 9 பேர் நிலைமை மோசமாக  இருப்பதாக கூறப்படுகிறது.

காயமடைந்த அனைவரும் துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். உயிருக்கு போராடும் 9 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதில் திருச்சி மாவட்டம் பேரூரைச் சேர்ந்த குணசீலன் (75), குமரத்தி (52) சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

விபத்து நடந்த இடத்தில் துறையூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின் துரிதமாக செயல்பட்டு இறந்தவர்களின் உடலையும், உயிருக்கு போரடியவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்..

Quarter page

Leave A Reply

Your email address will not be published.