உயிர் வளர்ப்போம்-29

கதை வழி மருத்துவம் (அருளமுதம் எனும் அருமருந்து)

0

“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு”

என்கிற வள்ளுவன் மொழிக்கு ஏற்ப பலமுறை எண்ணி பரிசீலனை செய்த பின்பு முடிவெடுக்க வெண்டும்.

 

ஒரு நல்ல  இல்வாழ்க்கைக்கு இரண்டாம் படி காலத்தே பயிர் செய்தல் ஆகும். ஒரு பெண்ணினுடைய வாழ்க்கையை 7 என்கின்ற எண்ணை அடிப்படையாகக் கொண்டு பிரிக்க வேண்டும், அவ்வாறே ஒரு ஆணினுடைய வாழ்க்கையை எட்டு என்கிற எண்னை அடிப்படையாகக் கொண்டு பிரிக்க வேண்டும்.

ஒரு பெண்ணின் வாழ்க்கை 1-7வயது, 8-14 வயது, 15-21 வயது, 22-28 வயது, 29-35 வயது, 36-42வயது, 42-49வயது என ஏழாக பிரித்துக்கொள்ள வெண்டும். இந்த 49 ஆண்டுகள் தான் ஒரு பேண்ணின் ஜனன உறுப்பு இயக்கத்தில் இருக்கும் காலம். இதில் முதல் மூன்று ஜனன உறுப்புகளின் வளர்ச்சி காலம். இது திருமணத்திற்கு உகந்த காலம் அன்று. அடுத்ததாக வரும் நான்காம் பருவத்தில் (22-28 வயது) ஒரு பெண்ணினுடைய ஜனன உறுப்பு பூரண வளர்ச்சி பெற்று தாம்பத்தியத்திற்கு தயார் நிலையில் இருக்கும். இந்த நான்காம் பருவமே ஒரு பெண்ணின் திருமணத்திற்கு உகந்த பருவம் ஆகும்.

ஒரு ஆணின் வாழ்க்கை 1-8வயது, 9-16 வயது, 17-24 வயது, 25-32 வயது, 33-40 வயது, 41-48வயது, 49-56வயது, 57-64 வயது  என எட்டாக பிரித்துக்கொள்ள வெண்டும். இந்த 64 ஆண்டுகள் தான் ஒரு ஆணின் ஜனன உறுப்பு இயக்கத்தில் இருக்கும் காலம். இதில் முதல் மூன்று ஜனன உறுப்புகளின் வளர்ச்சி காலம். இது திருமணத்திற்கு உகந்த காலம் அன்று. அடுத்ததாக வரும் நான்காம் பருவத்தில் (25-32 வயது) ஒரு ஆணினுடைய ஜனன உறுப்பு பூரண வளர்ச்சி பெற்று தாம்பத்தியத்திற்கு தயார் நிலையில் இருக்கும். இந்த நான்காம் பருவமே ஒரு ஆணின் திருமணத்திற்கு உகந்த பருவம் ஆகும்.

 

இந்த நான்காம் பருவத்திற்கு முன்னர் நடக்கும் திருமணம் ஒருவருக்கு ஆரோக்கியத்திலும் மனத்திலும் சீர்கேட்டை ஏற்படுத்தும். நான்காம் பருவத்திற்குப் பின்னரும் ஒரு பெண் திருமணம் ஆகாமல் இருந்தால் அது அவளை முதிர்கன்னி என்கின்ற நிலைக்கு தள்ளிவிடும், ஒரு ஆண் திருமணமாகாமல் இருந்தால் அது அவரை கிழக்காளை என்கின்ற நிலைக்கு தள்ளிவிடும் . இந்த நிலை ஆண் பெண் இருவருக்கும் உடலளவிலும் மனதளவிலும் வலுவான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். தாம்பத்தியம், குழந்தை பேறு என இல்வாழ்வின் முக்கிய அம்சங்கள் அனைத்தும் சீர்கெடும். எனவே ஒரு ஆணும் அல்லது பெண்ணும் தனது மனதிற்கு இனிய ஒரு துணையை சரியான காலத்தில் தேர்ந்தெடுத்தல் மிக அவசியமான ஒன்றாகும்.

 

food

இன்றைய காலச்சூழலில் இளம்பருவத்தினர் முறையான பருவம் வருவதற்கு முன்பாகவே, அதாவது தங்களின் ஜனன உறுப்பு பூரண வளர்ச்சி அடைவதற்கு முன்பாகவே உறுப்பினை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து விடுகின்றனர். மனதளவில் அவர்களுக்கு தூண்டப்படுகின்றன முறையற்ற காம எண்ணங்கள் அவர்களை பல்வேறு தவறான வடிகால்களுக்குள் தள்ளி விடுகின்றன. ஒரு அரும்பானது இயல்பாகவே மொட்டாகி பூத்து காய்த்து பின்னர் கனிய வேண்டும். அதைவிடுத்து ஒரு அரும்பையோ அல்லது மொட்டையோ வலுக்கட்டாயமாக விரித்தால் அதன் அடுத்தடுத்த பருவங்கள் பாதிப்புக்கு உள்ளாகும். அது ஒரு நல்ல மலராகவோ அல்லது காயாகவோ கனியாகவோ மாற இயலாது. இயற்கை அன்னை ஒவ்வொன்றுக்கும் முறையான காலத்தினை வகுத்து இருக்கிறாள்.

எனவே தங்களுக்கான காலம் வரும் வரை காத்திருந்து காலத்தே பயிர் செய்யவும்.  தங்களுக்கான காலம் கனியும் முன்னர் எந்த ஒரு காரணி (கூடா பழக்கம், தொலைக்காட்சி, கணினி, கைப்பேசி) தங்களை திசை திருப்ப முயற்சித்தாலும் தங்களின் பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள். தங்களின் கவனத்தை இறைவனின் பால் திருப்பி கொண்டு முறையான காலம் வரும் வரை எங்களுக்கு பொறுமையை கொடு இறைவா என மன்றாடி கேளுங்கள். தியானம், யோகம், கலை போன்ற நல்ல விஷயங்களில் தங்களின் கவனத்தினை திசை திருப்பி தங்களின் எதிர்காலத்தினை நல்லபடியாக கட்டமைக்க வித்திடுங்கள், பொறுமை கொள்ளுங்கள்.

 

தாம்பத்தியம் சிறக்க மூன்றவது படிநிலை உடற் பொருத்தம் ஆகும். ஆண் பெண் இருபாலாரிலும் மூன்று இனங்கள் உண்டு. ஆண் வர்க்கத்தில் முயல் காளை குதிரை என மூன்று பிரிவினைகளும் பெண் வர்கத்தில் மான், குதிரை, யானை என மூன்று பிரிவினைகளும் உண்டு.

ஆண் வர்க்கம்:

முயல் இனம்: ஒரு முயல் இன ஆடவன் நான்கு அங்குலம் நீளமுடைய ஆண்குறியை கொண்டிருப்பான். அவனுடைய சுக்கிலம் மலரைப் போன்று வாசம் உடையதாகவும்,  இனிப்பு சுவை கொண்டதாகவும் இருக்கும். உடலுறவின்போது அவனுடைய இயக்கம் முயலின் ஓட்டத்தை போன்று ஆரம்பத்தில் அதிவேகமாகவும், இயக்க நேரம் ஒரு சில நிமிடங்களாகவும் இருக்கும். விரைவாக சுக்கிலம் வெளியேறி எளிதில் சோர்வடைபவனாக இருப்பான். மிகவும் சாந்தமான குணம் கொண்டவனாகவும், குறைவான அளவு உணவு உண்பவனாகவும், குளிர்ச்சியான பார்வை கொண்டவனாகவும், குறைந்த காமவேட்கை கொண்டவனாகவும் இருப்பான்.

 

காளை இனம்: ஒரு காளை இன ஆடவன் ஆறு அங்குல நீளமுடைய ஆண்குறியை கொண்டிருப்பான். இவனது சுக்கிலம் இளநீரை ஒத்த வாசனை உடையதாகவும்,  துவர்ப்பு சுவை கொண்டதாகவும் இருக்கும். உடலுறவின்போது இவனது இயக்கம் காளையின் ஓட்டத்தை போன்று ஆரம்பத்தில் குறைந்த வேகத்திலும் நிறைவுறும்பொழுது உச்சக்கட்ட வேகத்திலும், இயக்க நேரம் இரண்டு நாளிகைகளுக்கு (45 நிமிடங்கள்) குறையாமலும்  இருக்கும். நிதானமாக சுக்கிலம் வெளியேறி நிதானமாக சோர்வடைபவனாக இருப்பான். மத்திம குணம் கொண்டவனாகவும், மிதமான அளவு உணவு உண்பவனாகவும், கூர்மையான பார்வை உடையவனாகவும், மிதமான காம வேட்கை உடையவனாகவும்  இருப்பான்.

 

குதிரை இனம்: ஒரு குதிரை இன ஆடவன் எட்டு அங்குல நீளமுடைய ஆண்குறியை கொண்டிருப்பான், இவனது சுக்கிலம் துர்நாற்றம் உடையதாகவும்,  உவர்ப்பு சுவை கொண்டதாகவும் இருக்கும்.  உடலுறவின்போது இவனது இயக்கம் குதிரையின் ஓட்டத்தை போன்று ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஒரே நிதான வேகத்திலும், இயக்க நேரம் 4 நாளிகைகளுக்கு (1 மணி நேரம் 30 நிமிடங்கள்) குறையாமலும் இருக்கும். மெதுவாக சுக்கிலம் வெளியேறி மெதுவாக சோர்வடைபவனாக இருப்பான். அதிக அளவு உணவு உண்பவனாகவும், சற்றே அகோர குணம் கொண்டவனாகவும், அகண்ட பார்வை கொண்டவனாகவும், அதிகமான காம வேட்கை உடையவனாகவும் இருப்பான்.

 

gif 4

Leave A Reply

Your email address will not be published.