சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சியில் ஒர் உலக சாதனை

0
Full Page

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சியில் ஒர் உலக சாதனை

 

திருச்சி ஆகஸ்டு 15, இந்திய திருநாட்டின் 73வது சுதந்திர தின விழாவை முன்னிட்டும் தலை கவசம் அணிவதன் அவசியத்தை வழியுறுத்தியும் “சேவா ரத்னா” டாக்டர். ஆர்ம்ஸ்ட்ராங் ராபி அவர்களின் அவர்களின் முதல் உலக சாதனை நிகழ்ச்சி 15.08.2019 அன்று காலை 10.00 மணியளவில் திருச்சி இந்திரா கணேசன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின் செயலாளர் ராஜசேகரன் தலைமை தாங்கினார், இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின் இயக்குநர் டாக்டர். பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

Half page

இந்த நிகழ்ச்சியில் “சேவா ரத்னா” டாக்டர். ஆர்ம்ஸ்ட்ராங் ராபி தலை கவசம் அணிந்து கொண்டு வலது கையில் தேசிய கொடியை ஏந்தியும், ஒரே (இடது) கையில் மட்டும் இரு சக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு 15 கிலோ மீட்டர் தூரத்தை 37 நிமிடங்களில் கடந்து புதிய உலக சாதனை புரிந்தார். இந்த சாதனை நிகழ்வை ஜெட்லீ புக் ஆஃப் ரெகார்ட்ஸ் உலக சாதனை நிகழ்வாக அங்கீகரித்து ஜெட்லீ புக் ஆஃப் ரெகார்ட்ஸ் நிறுவனர்

Dr. டிராகன் ஜெட்லி மற்றும் அவரது குழுவினர்கள் உலக சாதனைக்கான சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக 33வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தினகரன், சமூக ஆர்வலர் நாதன், பெர்ல் அறக்கட்டளையின் இயக்குநர் வழக்கறிஞர் ராமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்திரா கணேசன் கல்விக் குழும பேராசியர்கள், பேராசிரியைகள், ஆசிரியர்கள், ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், மாணவ மாணவிகள் மற்றும் “சேவா ரத்னா” டாக்டர். ஆர்ம்ஸ்ட்ராங் ராபியின் பெற்றோர்கள் அகஸ்டின் ஜாக்கப், ஞானமணி, அவரது மனைவி பிலோமினா, மகள் ஆண்டீரியா ஆன்ஸ் மற்றும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு அவரை உற்சாகபடுத்தினார்கள். இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை பக்கிரிசாமி மற்றும் தீப லெக்ஷமி ஆகியோர் செய்து இருந்தார்கள்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.