திருச்சி த.மு.மு.க. சார்பில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

0

இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் மிக முக்கியமானது ஹஜ் பெருநாள் (பக்ரித்) பண்டிகை நேற்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பல இடங்களில் நடைபெறுகிறது.
அவற்றில் திருச்சி மாவட்டம் சார்பில் பெருநாள் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை சையது முர்துசா பள்ளி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.

இத்தொழுகைக்காக வருபவர்கள் காலை உணவு சாப்பிடாமலே தொழுகையை நிறைவேற்றி விட்டு அதன் பிறகு குர்பானி பிரானிகளை அறுத்து பலியிட்டு இறைச்சிகளை ஏழைகளுக்கு வழங்குவதே ஹஜ் பெருநாள் பண்டிகையின் நோக்கம்.

நேற்று காலை 7.00 மணியளவில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் முஸ்லிம்கள் ஆண்களும், பெண்களும் சிறுவர்சிறுமியர் என ஆயிரத்திர்க்கும் மேற்பட்டோர் தொழுகையில் ஈடுபட்டனர்.

food

சிறப்பு தொழுகைக்கு பிறகு ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.

உரைக்கு பின்னர் ஒருவருக்கொருவர் ஈன்முகத்தோடு வாழ்த்துக்களை பரிமாறி கொண்டு இனிப்புகள் வழங்கினர்.

இச்சிறப்பு தொழுகையை மாநில பொருளாளர் ஷபயுல்லா கான், மாவட்ட தலைவர் ஜாபர் அலி, மாவட்ட செயலாளர்கள் இப்ராஹிம்,அஷ்ரப் மாவட்ட பொருளாளர் ராஜா முஹம்மது, ஆசியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.