காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதல் ரயில் பாதைகள்

0
gif 1

காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதல் ரயில் பாதைகள் குறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் வெளியிட்டுள்ள தகவல்.

வடக்கு ரயில்வேயில் டெல்லி, லக்னோ, மொரதாபாத், பிரோஸ்பூர், அம்பாலா என ஐந்து கோட்ட ரயில்வேக்கள் உள்ளன. வடக்கு ரயில்வேயின் 7301 கிமீ பாதையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 298 கி.மீ தூரத்திற்கு மட்டுமே ரயில்வே பாதையும் 36 ரயில் நிலையங்களும் உள்ளன. சிக்கலான புவியியல் அமைப்பு மற்றும் மோசமான சீதோஷ்ண நிலை இந்த பகுதி ரயில்வே திட்டங்களுக்கு தடைகளாக இருக்கிறது.

தேசிய முக்கியத்துவ திட்டத்தின் கீழ் 326 கி.மீ ஜம்முஉதாம்பூர்ஸ்ரீநகர்பாரமுல்லா புதிய ரயில் பாதை திட்டம் ரூ.19,565 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதில் 215 கி.மீ தூரம் பணிகள் நிறைவடைந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. விடுபட்ட 111 கி. மீ தூர கத்ராபனிகால் இடையே பணிகள் நடந்து வருகிறது.

இமாலச்சல பிரதேச பிலாஸ்பூர், .ஜம்மு காஸ்மீர் லடாக் இடையே மனாலி  வழியாக 498 கி.மீ தூர புதிய ரயில் பாதை திட்டம் நிதியாண்டு 2011-12 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 2012-13 நிதியாண்டு திட்டக்கமிஷன் ஒப்புதலுக்கு அனுப்ப பட்டது. கடந்த 2016 ம் ஆண்டு அலுவலகத்திற்கு வடக்கு ரயில்வே இடம் வாங்கியதோடு இத்திட்டம் நிற்கிறது. இத்திட்டம் நிறைவேறும் பட்சத்தில் லடாக் யூனியன் பிரதேசத்தில் ரயில் பாதைகள் உருவாகும். 223 கி.மீ ஜம்முபூஞ்ச், 38 கி.மீ பாரமுல்லாகுப்வார மற்றும் கத்ராபதர்வா இடையே ரயில்வே பாதைகள் அமைக்க சர்வேக்கள் எடுக்கப்பட்டன. இதில் ரூ 13613 கோடி மதிப்பிலான ஜம்முபூஞ்ச் திட்டத்தை பாதுகாப்பு துறை மற்றும் ரயில்வே இணைந்து நிறைவேற்ற இருக்கிறது. 430 கி.மீ  ஸ்ரீநகர்கார்கில்லேக் மற்றும் 400 கி.மீ பதான்கோட்லேக் பாதைகளுக்கான சர்வேக்கள் நடந்து வருகிறது.

தற்போது போதுமான ரயில்வே கட்டமைப்புகள் அங்கு இல்லை. ரஜோரி மாவட்டம், உதாம்பூர், கலாகேட் பகுதிகளில் உயர்தர நிலக்கரி, பாரமுல்லா மாவட்டத்தின் பனியார், மற்றும் தோடா மாவட்டத்தின் ராம்பன், அஸ்ஸார் பகுதிகளில் ஜிப்சம், உதாம்பூர் மாவட்டத்தின் பன்தால் கிராமத்தில் மேக்னசைட் கனிமம், அனந்தநாக், பாரமுல்லா, புல்வாமா மாவட்டங்களில் லைம் ஸ்டோன், குப்வாரா மாவட்டத்தின் நிச்சோகாமா கிராமத்தில் லிக்னைட் கிடைக்கிறது. இதுதவிர பல மாவட்டங்களில் மார்புள் கற்கள் கிடைக்கிறது. ஜம்மு காஷ்மீர் லடாக் பகுதிகளில் ஏராளமான கனிம வளங்கள் இருப்பதாக ஆய்வுகள் உறுதிபடுத்தி இருக்கின்றன. இந்தியாவின் எதிர் கால வளர்ச்சியினை தீர்மானிக்கும் மிகப்பெரிய கனிமவள புதையல் பிரதேசம் இந்த ஜம்ம்மு காஷ்மீர்.

எனவே கூடுதல் ரயில் பாதைகள் அமைப்பது சரக்கு ,ராணுவ மற்றும் சுற்றுலா போக்குவரத்து வாயிலாக ரயில்வேக்கு நல்ல வருவாய் கிடைக்கும். ஜம்முகாஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களின் ரயில்வே திட்டங்களுக்கு இனி முன்னுரிமை தர வேண்டும்.

மனோகரன்

(துணைப் பொதுச் செயலாளர்

தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன்)

 

 

gif 2

Leave A Reply

Your email address will not be published.