முக்கொம்பில் புதிய மேலணை அரசு கூடுதல் செயலாளர் ஆய்வு

0
1

அரசின் பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளர் எம்.பாலாஜி திருச்சி மாவட்டத்தில்  சுற்றுப்பயணம் செய்து பல்வேறு வளர்ச்சிப்பணிகளையும் கால்வாய் தூர்வாரும் பணியினையும் ஆய்வு செய்தார். திருவெறும்பூர் தாலுகா ஆலத்தூர் கிராமத்தில் ரூ.75 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் மைலாயி மதகு வாய்க்கால் மற்றும் சாஸ்திரி மதகு வாய்க்கால் இடைச்சுவர் கட்டும் பணி மற்றும் கம்பரசம்பேட்டை, முள்ளிக்கரும்பூர், உய்யக்கொண்டான் வாய்க்கால் ஆகிய இடங்களில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியையும், கொடியாலம், கொடிகால் வாய்க்காலில் ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் நடக்கும் தூர்வாரும் பணியையும் பார்வையிட்டார்.

பின்னர் முக்கொம்பு மேலணையில் ரூ.387 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேலணை கட்டும் பணியையும், ரூ.38 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் தற்காலிக தடுப்பணை பலப்படுத்தும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

2

பின்னர் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து விவசாய பாசனதாரர்கள் ஆகியோர்களுடன் கலெக்டர் சிவராசு முன்னிலையில் பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளர் பாலாஜி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பின்னர் அதிகாரி களுடன் ஆலோசனை நடத் தினார்.

கூட்டத்தில் பாலாஜி கூறுகையில்,“குடிமராமத்து பணியின் திட்ட மதிப்பீட்டில் 90 சதவீதம் அரசு நிதியாகவும், 10 சதவீதம் விவசாயிகளின் பங்களிப்பாகவும் இருக்கும். குடிமராமத்து பணிகள் அனைத்தும் விவசாயிகள் மற்றும் பாசனதாரர்களை உறுப்பினர்களாக கொண்டவர்களால் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். ஏரிகளின் கட்டுமானங்கள், புனரமைத்தல், வாய்க்கால் கட்டுமானம் மற்றும் கட்டுமானப்பணி, அடைப்புப்பலகை புதுப்பிக்கும்பணி போன்ற பணிகள் தரமானதாக இருக்க வேண்டும். வருகிற 31-ந் தேதிக்குள் பணிகளை முடித்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும். இதை விடுத்து வேறு நபர்கள் ஏதேனும் குறுக்கீடு செய்தால் உடனடியாக கலெக்டரிடம் புகார் தெரிவிக்கலாம்” என்றார்.

நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் சப்-கலெக்டர் சிபி.ஆதித்யா செந்தில்குமார், பொதுப்பணித்துறை மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, பொதுப்பணித்துறை ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் பாஸ்கர், கண்காணிப்பு பொறியாளர் பத்மநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.