மணப்பாறை அருகே சுற்றுலா பேருந்து மோதி இளைஞர் பலி

0
1

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த அரசு நிலையப்பாளையத்தைச் சேர்ந்தவர் மனோகர் மகன் பாலமுருகன் (22), இவர் எலக்ட்ரீசியன். ஞாயிற்றுக்கிழமை மாலை பெட்ரோல் பங்குக்கு பைக்கில் சென்று திரும்பிக் கொண்டிருந்த நிலையில், வீரப்பூர் சென்றுவிட்டு கோவை நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து மோதி பாலமுருகன் உயிரிழந்தார்.

2

தகவலறிந்து சென்ற போலீஸார் பாலமுருகனின் உடலை மீட்டு மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த வையம்பட்டி போலீஸார், பேருந்து ஓட்டுநரான கோவையை சேர்ந்த கருணைபிரகாசம் மகன் மகேஷ்குமாரை(24) கைது செய்து விசாரிக்கின்றனர்

3

Leave A Reply

Your email address will not be published.