நாளை(13ம் தேதி) குடிநீர் விநியோகம் இருக்காது

0
Business trichy

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பைன் நிலையம்,  பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம்  மற்றும்  ஜீயபுரம், பிராட்டியூர் கூட்டுக் குடிநீர் திட்ட நிலையம் ஆகிய பகுதி முழுவதும்  மின் விநியோகம் நடைபெறும் கம்பரசம்பேட்டை  துணை மின் நிலையத்தில் மின்வாரியத்தால் மாதாந்திர  பராமரிப்பு பணி 13.08.2019 அன்று காலை 9.45 மணிமுதல் மாலை 5.00 மணிவரை மேற்கொள்ளப்படவுள்ளதால், கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் மரக்கடை, விறகுபேட்டை, ஆகிய பகுதிகளிலும், டர்பைன் நிலையத்தில் அடங்கும்  மலைக்கோட்டை மற்றும் சிந்தாமணி ஆகிய பகுதிகளிலும், பெரியார் நகர் கலெக்டர் வெல் நிலையத்தில் அடங்கும் தில்லைநகர், அண்ணாநகர், புத்தூர், காஜாப்பேட்டை, கண்டோன்மெண்ட், ஜங்ஷன், உய்யக் கொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்க நகர் , ஆல்ஃபா நகர், பாத்திமா நகர், கருமண்டபம் மற்றும் காஜாமலை காலனி ஆகிய பகுதிகளிலும்  மற்றும் பிராட்டியூர்கூட்டுக் குடிநீர் திட்டத்தில் அடங்கும் ராம்ஜி நகர், பிராட்டியூர், எடமலைப்பட்டிபுதுhர், விஸ்வாஸ் நகர், ஜெயா நகர் மற்றும் பிராட்டியூர் காவேரி நகர் ஆகிய பகுதிகளிலும் 13.08.2019 ஒருநாள் குடிநீர் விநியோகம் இருக்காது. மறுநாள் 14.08.2019 அன்று வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைத்து குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கேட்டுக்கொள்கிறார்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.