திருச்சியில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

0
gif 1

முஸ்லிம்களுடைய பண்டிகையான ஹஜ் பெருநாள் (பக்ரித்) பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறுகிறது.

அவற்றில் திருச்சி மாவட்டம் சார்பில் பெருநாள் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.

இத்தொழுகைக்காக வருபவர்கள் காலை உணவு சாப்பிடாமலே தொழுகையை நிறைவேற்றி விட்டு அதன் பிறகு குர்பானி பிரானிகளை அறுத்து பலியிட்டு இறைச்சிகளை ஏழைகளுக்கு வழங்குவதே ஹஜ் பெருநாள் பண்டிகையின் நோக்கம்.

gif 3
gif 4

காலை 7.15 மணியளவில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் முஸ்லிம்கள் ஆண்களும், பெண்களும் சிறுவர்சிறுமியர் என ஐந்தாயிரத்திர்க்கும் மேற்பட்டோர் தொழுகையில் ஈடுபட்டனர்.

சிறப்பு தொழுகைக்கு பிறகு ஆன்மீக சொற்பொழிவு சகோ.கோவை.ரஹ்மத்துல்லாஹ் நிகழ்த்தினார். அவற்றில் நபி இப்ராஹீம் அவர்களின் தியாகம் விளக்கப்பட்டது. அமைதி, சாந்தி, சமாதானத்தை இஸ்லாம் போதிக்கிறது என்றும் உலகில் அமைதி நிலவுவதற்க்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும். இஸ்லாம் போதிக்ககூடிய அன்பை நாம் அனைவரிடத்திலும் பரிமாரிக்கொள்ள வேண்டும். பெற்றோர்களையும் முதியோர்களையும் கண்ணியப்படுத்த வேண்டும், தீவிரவாதத்திற்கு எதிராக தொடர் பிரச்சாரத்தை வீரியமாக செய்யவேண்டும் என உரை நிகழ்த்தப்பட்டது.

உரைக்கு பின்னர் ஒருவருக்கொருவர் ஈன்முகத்தோடு வாழ்த்துக்களை பரிமாறி கொண்டு இனிப்புகள் வழங்கினர்.

இச்சிறப்பு தொழுகையை திருச்சி மாவட்ட தலைவர் குலாம் தஸ்தஹர், செயலாளர் செய்யது ஜாஹர், பொருளளர் ஹுசேன், துணை தலைவர். சமயபுரம் உமர், துணை செயலாளர் முகமது ரபிக், சாஹீன், ஜுபேர், ரசூல் ஆசியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்

gif 2

Leave A Reply

Your email address will not be published.