நெகிழி இல்லா சுதந்திர தினம்

0
Business trichy

பள்ளிகள், அரசு அலுவலகங்களில் கொண்டாடப்படவுள்ள சுதந்திர தினவிழாவில் காகிதம், துணிகளால் ஆன தேசியக் கொடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.”,

பள்ளிகள், அரசு அலுவலகங்களில் கொண்டாடப்படவுள்ள சுதந்திர தினவிழாவில் காகிதம், துணிகளால் ஆன தேசியக் கொடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் கொடிகளை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் வரும் 15 -ஆம் தேதி சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுதந்திர தின விழாவில் பிளாஸ்டிக் கொடி தோரணங்கள், தனி பிளாஸ்டிக் கொடிகள், ஆடையில் அணிந்துகொள்ளும் பிளாஸ்டிக் கொடிகள் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி ஏறியப்படும் 14 வகையான நெகிழி பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுதந்திர தின விழாவில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை, அனைத்துத் துறைக்கும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

loan point
web designer

இதுகுறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியது:  தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் 14 வகையான நெகிழி பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றனஇந்த நிலையில், வரும் 15-ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. 

nammalvar

அந்த நாளில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களை தவிர்க்க வேண்டும். அனைத்துப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் நெகிழி கொடிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். காகிதம், துணியால் ஆன கொடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்

மேலும், அவற்றை சாலையோரங்களில் வீசிவிட்டு செல்லக்கூடாது. இது தொடர்பாக அனைத்து வகையான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தனியார் அமைப்புகள் சார்பில் கொண்டாடப்படும் சுதந்திர தின விழாவில் நெகிழி பொருள்களை தவிர்க்க வேண்டும் என்றனர்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.