திருச்சி தலைமை தபால் நிலைய அலுவலகத்தை எஸ்.டி.பி.ஐ முற்றுகை போராட்டம்!

0
Business trichy

என்.ஐ.ஏ., யு.எ.பி.ஏ. சட்டங்களில் மாநில சுயாட்சியை பறிக்கும் விதமாக திருத்தங்களையும், அரசின் வெளிப்படைத்தன்மையை கேள்விக்குட்படுத்தும் ஆர்.டி.ஐ. சட்டத்தில் திருத்தத்தையும், காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட 370-35ஏ ஆகிய சிறப்பு சட்டங்களை நீக்கியும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள மத்திய பாஜக அரசை கண்டித்து, நாடு முழுவதும் ‘பாசிசமே இந்தியாவை விட்டு வெளியேறு’ என்ற முழக்கத்துடன் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்துகின்றது. அதன் ஒருபகுதியாக  திருச்சியில் நேற்று தலைமை தபால் நிலைய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருச்சி மாவட்ட பொதுசெயலாளர் நியமத்துல்லா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாவட்ட துணைதலைவர் பிச்சைகனி , மாவட்ட செயலாளர்கள் பொன்னகர் ரபிக், முபாரக் அலி , மாவட்ட பொருளாளர் காதர் , SDTU தொழிற்சங்க மாவட்ட தலைவர் முஸ்தபா , மாவட்ட செயற்குழு உறுப்பினர்களும், தொகுதி நிர்வாகிகளும்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முற்றுகை போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் ரத்திணம் அண்ணாச்சி “மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு, அதிகார வெறியுடன் மக்களவையில் பல்வேறு சட்டங்களை அதிவிரைவாக இயற்றி வருகின்றது. பெரும்பான்மை மமதையில் இதுவரை இல்லாத வகையில் ஒரே கூட்டத்தொடரில் 30 சட்ட மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. என்.ஐ.ஏ., யு.எ.பி.ஏ. சட்டங்களில் மாநில சுயாட்சியை பறிக்கும் விதமாக திருத்தங்களையும், அரசின் வெளிப்படைத்தன்மையை கேள்விக்குட்படுத்தும் ஆர்.டி.ஐ. சட்டத்தில் திருத்தத்தையும், காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட 370-35ஏ ஆகிய சிறப்பு சட்டங்களை நீக்கியும், காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக உடைத்தும் தனது அதிகார வெறியை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

Kavi furniture
MDMK

காஷ்மீர் விவகாரத்தில் பாஜக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையானது, இந்தியாவின் பிற மாநிலங்களிலும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அரசியல் அவமதிப்புக்கான ஒரு முன்னோட்டமாகவே தெரிகின்றது.

மத்திய பாஜக அரசு, பெரும்பான்மை பலம் மூலம் கிடைத்த அதிகார வெறியில், சட்டம், சுதந்திரம் மற்றும் அறநெறி தடைகளை அங்கீகரிக்காத அரசாகவும், நாட்டின் ஜனநாயகத்தையும் அதன் விவாதத்தையும் கேலி செய்யக்கூடிய அரசாகவுமே உள்ளது. மேலும், அடக்குமுறை சட்டங்கள் மூலம் மக்களை அச்சமூட்டுவதை உளவியல் கோட்பாடாக கொண்டுள்ளது. இத்தகைய அடக்குமுறை நடவடிக்கைகள் ஹிட்லரின் பாசிச காலத்தை திரையில் விரைவாக ஓடவிட்டு பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, பிரிட்டீஷ் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களின் சர்வாதிகாரப் போக்கை மிஞ்சும் விதமாகவும் பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகள் இருக்கின்றன. இத்தகைய பாசிச போக்குக்கு எதிராக மீண்டும் ஓர் சுதந்திரப் போரை நோக்கி நகர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, வெள்ளையனே வெளியேறு இயக்க தினமான ஆகஸ்டு 9-ஐ, பாசிசமே இந்தியாவை விட்டு வெளியேறும் தினமாக, நாடு முழுவதும் கடைப்பிடிக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி முடிவு செய்து, பாஜக அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்துகின்றது. அதன் ஒருபகுதியாக திருச்சி தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றது.” என்றார்.

இதில் ஏரளாமான நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் கைதும் செய்யப்பட்டனர்.

 

Pranav city

Leave A Reply

Your email address will not be published.