திருச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

0
1 full

திருச்சியில் வெள்ளிக்கிழமை அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினர் 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருச்சியில் வெள்ளிக்கிழமை அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினர் 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.

காஷ்மீரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய பொதுச் செயலர் ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்தை வாபஸ் பெறக் கோரியும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் திருச்சி மாவட்ட குழு சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2 full

திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் மாநகர் மாவட்ட செயலர் ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் மாநகர் மாவட்ட செயலர் திராவிடமணி ஆகியோர் தலைமை வகித்தனர்.  அப்போது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளதாக போலீஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மறியலில் ஈடுபட முயன்றனர். போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர் உள்பட 30 பேரை கைது செய்தனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.