பிரம்மமுனி (பதினெண் சித்தர்கள்… 14)

0
1

முற்பகுதி வாழ்க்கை:

குஜராத் மாநிலத்தில் துவாரகைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பிறவியிலிருந்தே ஒரு குழந்தை தெய்வீக ஆற்றல்களோடு வளர்ந்து வந்தது. அக்குழந்தை வளர்ந்து சிறுவனாகி 16 வயதாகும் முன்பே தான் ஒரு பிரம்ம ஞானி என்று நிரூபித்து வந்தான். தெய்வீக ஆற்றலைக் கொண்டு அவன் மக்களின் நோய்களையும் குறைகளையும் போக்கி வந்தான். மக்கள் அவனை தெய்வமாகவே மதித்து ஞானேஸ்வரர் என்று அழைத்து வந்தனர்.

கோரக்கருடன் நட்பு

கோரக்க மகாசித்தர் வடநாட்டு யாத்திரை சென்றபோது தன் தவவலிமையால் ஞானேஸ்வரரை வெற்றிகொள்ள வேண்டும் என்று அந்த கிராமத்திற்குச் சென்றார். தன்னைக் கண்டு அந்த சிறுவன் அஞ்சி ஓட வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு புலி மேலே அவனை நோக்கிச் சென்றார். அப்போது ஞானேஸ்வரர் ஒரு குட்டிச்சுவரின் அருகில் தன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். ஒரு முனிவர் தன்னை காணவருதைக் கண்ட ஞானேஸ்வரர் நண்பர்களுடன் குட்டிச் சுவரின் மேல் உட்கார்ந்து கொண்டு முனிவரை வரவேற்க விண்ணில் பறந்து சென்றார். அவர் தன்னை நெருங்கி வருவதைத் தடுக்க, கோரக்கர் தன் தவவலிமையால் பிரம்மாஸ்திரத்தை ஏவிவிட்டார். ஞானேஸ்வரர் அருகில் வந்த அந்த அஸ்திரம் பூமாலையாக மாறி அவர் கழுத்தில் விழுந்தது. அதனால் கோபமுற்ற கோரக்கர் நாகாஸ்திரத்தை ஏவினார். ஞானேஸ்வரர் அந்த நாகத்தைப் பற்றி எய்தவரிடமே திருப்பிவிட அதுபாம்பாக வந்து கோரக்கர் கழுத்தில் விழுந்தது. அதன்மூலம் ஞானேஸ்வரரின் தெய்வீக ஆற்றல் தம் தவவலிமையை விட மிகவும் உயர்ந்தது என்பதை உணர்ந்த கோரக்கர் ஆணவம் அடங்கியவராய் ஞானேஸ்வரரை வணங்க இருவரும் நண்பர்களாயினர். பிறகு கோரக்கரும் ஞானேஸ்வரரும் ஒன்று சேர்ந்து வடமதுரை வழியாக குருஷேத்திரத்தைச் சென்றடைந்தனர். அங்கு சிலகாலம் தவவாழ்க்கைக்குப்பின் நேரே தமிழ்நாடு வந்தனர்.

ஞானேஸ்வரர் பிரம்ம முனியான பிறகு:

2

கோரக்கருடன் தமிழகம் வந்த ஞானேஸ்வரர் சதுரகிரி சித்தர் கூட்டத்தில் சேர்ந்து தமிழ் மொழியைக் கற்றார். தமிழக சித்தர்கள் அவரது தவவலிமையைக் கண்டு வியந்து அவரை பிரம்மமுனி என்றே அழைத்தனர். பிறகு கோரக்கரும் பிரம்மமுனியும் தங்களாலும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் செய்ய முடியும் என்று நிரூபிக்க வேண்டி ஒரு யாகம் வளர்த்ததன் மூலம் கஞ்சாச்செடியும், புகையிலைச் செடியும் தோன்றுவதற்கு காரணமாயினர். (விபரம் கோரக்கர் வரலாற்றில் காண்க)

பிரம்மமுனி சமாதி கூடல்

தாம் இயற்கை விதிகளை கடந்து யாகம் வளர்த்தது தவறு என்பதை உணர்ந்த பிரம்மமுனி கோரக்கரைப் பிரிந்து தெற்கே சென்று இலங்கை அடைந்தார். அங்குள்ள திரிகோண மலையில் ஜீவசமாதி கூடியிருந்து அருளாட்சி செய்து வருகிறார். பிரம்மமுனி ஜீவசமாதி அடைந்தபோது கோரக்கரும் அவர் அருகில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

 

 

3

Leave A Reply

Your email address will not be published.