திருச்சி விக்னேஷ் கல்விக் குழுமத்தின் பள்ளி ஆண்டு விழா.

0
Business trichy

திருச்சி விக்னேஷ் கல்விக் குழுமத்தின் ஒரு அங்கமான ஸ்ரீரங்கத்தில் உள்ள விக்னேஷ் ஸ்ரீரங்கா மெட்ரிகுலேஷன் பள்ளியில் 08-08-2019 அன்று ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர், விக்னேஷ் கல்விக் குழுமத்தின் அறங்காலவர், தலைவர், இயக்குநர் ஆகியோர் பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.

இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற காவல் துறை உதவி ஆய்வாளர் அனுராதா அவர்கள் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

Half page

பின்னர் அவர் பேசுகையில், ’ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் பெண்மணியாக சாதனையை படைத்தது, தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டியாலா பயிற்சி மையத்தில் 6 மாதங்கள் பயிற்சி எடுத்தபோது கிடைத்த நம்பிக்கையால் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வது வெகு தூரத்தில் இல்லை என்ற எண்ணம் எனக்கு உருவாகியுள்ளது.

டிசம்பர் மாதம் நேபாளில் சவுத் ஏசியன் ஃபெடரேஷன் கேம்ஸ் போட்டிகள் நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்கவுள்ளேன். இதற்காக நாளை டெல்லி பட்டியாலா செல்கிறேன். கண்டிப்பாக இந்த போட்டியில் பதக்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெறும் ஏசியன் கேம்ஸ் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கம் வெல்ல பயிற்சி மேற்கொண்டுள்ளேன்.

விளையாட்டு குறித்து விழிப்புணர்வு இல்லாத நிலை உள்ளது. முந்தைய காலக்கட்டத்தில் நானும் அவ்வாறுதான் இருந்தேன். கிராமப்புறங்களில் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஒவ்வொரு பள்ளிகளிலும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தமிழ்நாடு விளையாட்டில் சிறந்து விளங்கும்” என்றார்.

இந்த விழாவிற்கு விக்னேஷ் கல்விக் குழுமத்தின் அறங்காவலர் சகுந்தலா விருத்தாசலம் தலைமை வகித்தார்.  தலைவர் கோபிநாதன், லெஷ்மி பிரபா கோபிநாதன், இயக்குநர் வரதராசன், முதல்வர் விஐயலெஷ்மி, நிர்வாக அலுவலர் ஆறுமுகம் மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பெற்றோர்கள் உள்பட கலந்து கொண்டனர்.

Full Page

Leave A Reply

Your email address will not be published.