எம்.ஜி.ஆர். தந்த உயிர்

0
1

கொடுப்பதற்கு ஒரு கரம் நீண்டாலும், தடுப்பதற்கு சிலரது கரங்கள் இருக்கத்தான் செய்யும் என்ற சொல் உண்மையானது. அவருக்கு 3 மாதங்கள் வீடு தேடி வந்த ஊதியம். எந்த தருமபிரபுவின் தாராள மனதின் காரணமாகவோ தடுக்கப்பட்டு விட்டது.

தலைவர் எம்.ஜி.ஆரிடம் சொல்லுங்கள் என்று பலர் அவரிடம் தெரிவித்தனர். அவர் புகார் சொல்ல விரும்புவில்லை. வினை விதைத்தவர்கள் விளைச்சலை அறுவடை செய்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டார். அள்ளிக்கொடுத்து வாழ்பவர் நெஞ்சம் ஆனந்த பூந்தோப்பு என்றால், கெடுத்து வாழ்பவர் நெஞ்சம் பாழடைந்த கிணறுதானே. பயிர் விளையாத பாலைவனம் என்று கூறலாம் அல்லவா. முத்துவிளையும் கடலில் தானே திமிங்கிலமும் இருக்கின்றன. மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்த நோயாளி திரும்பி வந்த சில நாட்களிலேயே நடிகர் கமலஹாசனின் 100வது நாள் படவிழா நடைபெற்றது. விழா மலர்குழுவில் அவரது பெயரையும் வற்புறுத்தி போட்டிருந்தனர். எம்.ஜி.ஆரையும், விழாவையும் காணும் ஆவலில்  உடல் நலனை பொருட்படுத்தாமல் அவர் சென்றபோதுதான் ரத்த அழுத்தம் குறித்து எம்.ஜி.ஆர் பேசும்போதுதான் முன்பு குறிப்பிட்டதுபோல் குறிப்பிட்டார். தனது அன்புக்குரியவர்கள் எத்தனை ஆயிரம் பேருக்கு மத்தியில் இருந்தாலும் அவர்களை பார்வையால் பாசமழையை பொழிவது எம்.ஜி.ஆரின் கைவந்த கலை. அந்த பாசமழையில் வளர்ந்த பயிர்களில் ஒருவன், மருத்துவமனையில் இருந்த உயிர் மீண்டு வந்து, அவரது புகழுக்கு புகழ் பூச்சொரிந்து கொண்டிருப்பவன் இந்த எளியவன்தான். ஆமாம் எனக்காக எம்.ஜி.ஆர். இரவு முழுவதும் மருத்துவமனையில் விழித்திருந்து நான் பிழைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். நான் இதோ எழுதுகிறேன். அவர் என்னைப்போன்ற உண்மையான நேசம் மிக்க மனிதர்களின் நெஞ்சங்களில் வாழுகின்றார். அவர் காலத்தை வென்றவர். காவியமானவர். வேதனைத் தீர்ப்பவர். விழிகளில் நிறைந்தவர், வெற்றித்திருமகன்.

எம்.ஜி.ஆரிடத்தில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. வாழ்க்கை என்பது என்ன? தியாகம் என்பது என்ன? அவர் அளித்த பதில் இதுதான் உண்மையான வாழ்க்கையே தியாகத்தின் அடிப்படையில்தான் தோன்றுகிறது. “எம்.ஜி.ஆரின் வாழ்க்கையே தியாக வாழ்வுதான்.” அதனால்தான் மக்கள் திலகம், ஏழை பங்காளன் என்று போற்றப்படுகிறார்.

பத்திரிக்கையாளர் ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய எழுத்தும் பல நல்ல பண்புகளும் எம்.ஜி.ஆருக்கும் பிடிக்கும். அதன் காரணமாக அவரை எப்படியும் காப்பாற்றிவிட வேண்டும் என்று எம்.ஜி.ஆர். அரும்பாடுபட்டார். மருத்துவச் செலவுகளையும் எம்.ஜி.ஆரே பார்த்துக்கொண்டார். மாண்டுவிடுவார் என்று மருத்துவர்களே கைவிட்ட நிலையில் அந்த நண்பர் எம்.ஜி.ஆரின் உதவியால் மீண்டும் நலமுடன் நடமாடினார். உயிர் பிழைத்த அவர் மிகவும் நன்றியுடன் எம்.ஜி.ஆரின் கால்களில் விழுந்து கண்ணீர் விட்டார். நீங்கள் இல்லாவிட்டால் நான் பிழைத்திருக்க மாட்டேன். என்னை வாழவைத்த தெய்வம் என்று தழுதழுத்த குரலில் எம்.ஜி.ஆரிடம் கூறினார்.

மதுவின் பிடியில் சிக்காமல் ஒழுங்காக இருந்திருந்தால் இப்படி ஒரு சிரமம் உங்களுக்கு வந்திருக்காது. என்னை தெய்வமாக்காதீர்கள். நீங்கள் கும்பிட்டுக்கொண்டாடும் தெய்வமுன்பு இனிமேல் குடிப்பதில்லை என்று முடிவெடுங்கள். முடிவு செய்ததுபோல் வாழ்ந்துகாட்டுங்கள் என்ற எம்.ஜி.ஆர். கனிவுடன் கூறினார். இனிமேல் கனவில் கூட மதுவை தொடமாட்டேன் என்று உறுதியாக அந்த நண்பர் தெரிவித்தார். ஆனால் சபலப்படும் மனம் மீண்டும் மதுவுக்கு அடிமையானது. அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இனிமேல் மதுவை அருந்தினால் உயிர் பிழைக்க முடியாது என்று டாக்டர்கள் அவர் நிலைமையை அவரிடமே தெரிவித்துவிட்டனர். அவர் வருந்தினார். குமுறி அழுதார். எம்.ஜி.ஆருக்கு வாக்குறுதி அளித்தும் அதன்படி நடக்காததால் தனக்கு இந்த நிலை என்று சொல்லி சொல்லி களங்கினார். நான் திருந்தி வந்தால் அவரது அன்பையும் மதிப்பையும் திரும்ப பெறலாம் என்று மனதிற்குள் வைராக்கியம் எழுந்தது. டாக்டர்களும், எம்.ஜி.ஆரும் சொன்னதுபோல் கட்டுப்பாடாக இருக்கத் தொடங்கினார். அதனால் மீண்டும் நன்கு நடமாட ஆரம்பித்தார்.

2

தனது ஆசை நிறைவேற வேண்டும் என்பதற்காகவும், தனது உடல்நிலை சீரடைய வேண்டும் என்பதற்காகவும் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டுக்கொண்டார். ஐயப்பன் மலைக்கு மாலை போட்டுக்கொண்டு கட்டுப்பாடாக முறைப்படி விரதமிருந்து கட்டுப்பாடாக வழிபட ஆரம்பித்தார். இதன் காரணமாக அவரது உடல் நிலை சீரடைந்து முகத்தில் ஒரு தெளிவும் வந்தது. அவருடைய பழக்க வழக்கத்திலும் ஒரு ஒழுங்கு வந்ததுதான் அவரது தெளிவுக்கு காரணம். தன்னை சந்திப்பதை தவிர்த்து வந்த எம்.ஜி.ஆரை அவர் எதிர்பாராதவிதமாக சந்திக்க நேர்ந்தது. அருகில் சென்று வணக்கம் தெரிவித்த அவரை பக்கத்தில் அமரும்படி எம்.ஜி.ஆர். பாசத்துடன் கூறினார்.

அண்ணே! என்னை மன்னித்துவிடுங்கள் என்று தழுதழுத்த குரலில் நண்பர் எம்.ஜி.ஆரிடம் கெஞ்சினார். எதற்காக நான் மன்னிக்க வேண்டும். நான் சொன்னதுபோல் நடந்து கொண்டு நல்ல உடல் நலத்தோடு உங்களைப்பார்க்க எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா என்றார் எம்.ஜி.ஆர். ஒன்றுமே நடக்காதது போல். இவ்வாறு சொல்லியதைக் கேட்டு அந்த நண்பர் அவரையை வியந்து பார்த்தபடி நின்றார். என்ன மறந்து விட்டீர்களா? நீங்கள் கும்பிடும் தெய்வம் முன்பு இனிமேல் குடிப்பதில்லை என்று முடிவெடுங்கள். முடிவுசெய்ததுபோல் வாழ்ந்துகாட்டுங்கள். ஐயப்பனுக்கு வேண்டிக்கொண்டு மாலை போட்டுக்கொண்டு ஆரோக்கியமாக இருக்கிறீர்கள். நண்பர் அவரின் கைகளை பற்றிக்கொண்டு கண்ணீர் வடித்தார். அவரால் எதுவும் பேச முடியவில்லை. அப்போது எம்.ஜி.ஆர். உங்களை விரும்பி நேசிப்பவர்கள் வெறுத்து ஒதுங்கிச்செல்லும்படி நடந்துகொள்ளாதீர்கள்.

நீங்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். உங்கள் குடும்பத்திற்காக நீங்கள் எப்படி தவறான பழக்கத்திற்கு அடிமையாகாமல் எப்படி இந்த 40 நாட்களும் விரதம் இருந்தீர்களோ அந்த விரதம் இருக்கும் நாட்களிலாவது அந்த தவறான பழக்கம் இல்லாமல் இருக்கிறாரே என்று இல்லாமல் எப்போதும் இப்படி இருந்தால் எப்படி நன்றாக இருக்கும் மனதில் பதியும்படி சொல்லிவிட்டு எழுந்தார். நண்பர் எம்.ஜி.ஆர். கைகளைப்பிடித்தபடி கண்ணீர்விட்டார். கண்ணீரை துடைத்துவிட்டு நண்பர் முதுகில் தட்டிக்கொடுத்துவிட்டு எம்.ஜி.ஆர். புறப்பட்டார்.  நண்பர் மிகவும் கவனமாக தன்னை பார்த்துக்கொண்டார்.

அதுமட்டுமல்ல “தனது கையில் இது எம்.ஜி.ஆர். தந்த உயிர்” என்று பெரிதாக பச்சை குத்திக்கொண்டார். ஒருமுறை எம்.ஜி.ஆரிடமே இதை காண்பித்தார்.

அப்போது எம்.ஜி.ஆர். எனக்கு சொந்தமானதை பத்திரமாக பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமை என்று நாசூக்காகவும் நயமாகவும் எம்.ஜி.ஆர்.  கூறினார். அவர் யாருமல்ல பத்திரிக்கையாளர் கார்க்கி.

3

Leave A Reply

Your email address will not be published.