விவசாயமும் விவசாயியும்

0
Business trichy

 

இன்றைய விவசாயம் வாழ்வா? சாவா? என்ற போராட்டத்தில் தத்தளித்து கொண்டிருக்கிறது. அரிசி கொடுத்தவன் அரைஞாண் கயிறு வாங்கக் கூட காசில்லாமல் அல்லாடுகிறான். மரத்தை அழித்து மழையை இழந்தோம். தண்ணீர் பஞ்சத்தில் தள்ளாடுகிறோம். வயல், வரப்பில் சந்தோஷமாக வாழ்ந்தவர்கள்; வறுமையின் பிடியில் சிக்கி வாழ்வோடு போராடுகிறார்கள். கடன் வாங்கி கயிற்றில் தொங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். பிள்ளைகளின் ஆசைகள் நிராசை ஆகின்றது. விவசாயம் செய்வது தவறா? விவசாயியின் பிள்ளையாக பிறந்தது தவறா? என்ற மனநிலையில் வாழ்கிறார்கள்.

வெளிநாட்டவர்கள் விவசாயத்தில் சாதனை செய்கிறார்கள். விவசாய நாடான நம் நாடோ வேதனையில் இருக்கிறார்கள். கடனில் தத்தளித்து இறுதியில் உயிராக நினைத்து வாழ்ந்த விவசாய நிலத்தையும் விற்று விடுகிறார்கள். விளைநிலங்களும், வறண்ட குளங்களும், வீடுகளாகவும், அடுக்குமாடி குடியிருப்பாகவும் மாறி வருகிறது.

Kavi furniture

விவசாயம் சாவதற்குள் தனது சாவை எதிர்நோக்கி கொண்டிருக்கும் விவசாயி. சாவே முடிவென்றால் வாழ்ந்திட வழி காண்பது எவ்வாறு? மழை பொழிந்தால் மண் குளிரும், மண் குளிர்ந்தால் விவசாயி மனம் குளிரும். மண்ணும் மனமும் குளிர்ந்திட மழை வேண்டுவோம்.

தாயின் கருவறையிலேயே இருந்திருக்கலாம். அங்காவது தண்ணீரில் உயிர் வாழ்ந்தோம். தரையில் தவழ்ந்திட வந்தால், பாவம் பூமித்தாய் அவளுக்கே தண்ணீர் கிடைக்காமல் சாகும் போது, நாம் உயிர் பிழைப்பது எப்படி?

விவசாயி நாம் உண்ண அரிசி வேண்டுமே என்று நெல் பயிரிட்டான். அந்தோ பரிதாபம், அது அவனுக்கே வாய்க்கரிசி ஆகிவிட்டதே. இந்நிலை தொடருமா? இன்று அவனுக்கு! நாளை உனக்கு! விழித்துக் கொள்!

முகநூலில் நட்பை தேடும் மக்கள், முகத்திற்கு எதிரே விவசாயமும், விவசாயியும் அழிந்து கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்கிறார்கள். இந்நிலை தொடர்ந்தால், இன்று காசு கொடுத்து தண்ணீர் வாங்கி குடிக்கும் நாம், நாளை காற்றையும் காசு கொடுத்து வாங்கும் நிலை வரும். போராட்டம் தான் வாழ்க்கை என்றால் போராடிதான் பார்ப்போமே!

MDMK

போராடுவோம்!

வெற்றி பெறுவோம்!

செ. ஜான்சி ராணி

இடைநிலை ஆசிரியை

சிறுமலர் துவக்கப் பள்ளி

கிராப்பட்டி, திருச்சி-12.

 

.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.