திருச்சி காவேரி மருத்துவமனையை ஏமாற்றிய போட்டோஷாப் மோசடி !   செய்தது யார் ?

0
gif 1

திருச்சி காவேரி மருத்துவமனையை ஏமாற்றிய போட்டோஷாப் மோசடி !   செய்தது யார் ?

திருச்சி காவேரி மருத்துவமனை சார்பாக ஆன்லைனில் கொடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கை இது தான் !

gif 3

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் (உடனாளிகள்) வேண்டுகோளுக்கு இணங்க மருத்துவசேவைக்கு உதவிகளை பெற மருத்துவமனையிலிருந்து கடிதங்கள் பெறுவது இயல்பான ஒன்று.

அவ்வாறு பெறப்படும் கடிதங்கள் சமீப காலமாக போட்டோஷாப் மூலம் தவறான தகவல் மற்றும் தொகையை குறிப்பிட்டு முறைகேடாக பொதுமக்களிடமிருந்து நிதியை பெற பயன்படுத்தப்படுகிறது.

எனவே பொது மக்கள் இது போன்று நிதி வேண்டுகோள்களை சமூக வலைதளங்களிலோ வாட்ஸப்பிலோ கண்டால் அதன் உண்மை தன்மையை கண்டறியாமல் உதவி செய்து ஏமாறவேண்டாம்.

(கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாரு நாங்கள் திரு. TSK அவர்களுக்கு கடிதம் அனுப்பவில்லை. திரு. TSK (Vijay Tv) அவர்கள் இந்த கடிதத்தை நம்ப வேண்டாம்)

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெருகின்றோம் என்று கூறி உதவி வேண்டி யாரேனும் உங்களை அணுகினால் அதன் உண்மை தன்மையை அறியாமல் உதவ வேண்டாம். அவ்வாறு வரும் தகவல்களின் உண்மை தன்மையை அறிய 7708884460 என்ற எண்ணை அழைக்கவும்.

இது குறித்து நாம் விசாரிக்கையில் கடந்த ஜீன் மாதத்தில் ஒரு நாள் கருமண்டபத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் ஒரு நிகழ்ச்சி குழந்தையை தண்ணீர் தொட்டியில் விழுந்து பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறார்.  அந்த குழந்தையை காப்பாற்றுங்கள் என்று காவேரி மருத்துவமனையில் திருச்சியின் முக்கிய புள்ளிகளின் சிபாரில் மருத்துமனையில் சேர்த்திருக்கிறார்கள்.  

முக்கியபுள்ளியின் சிபாரிசில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் குழந்தைக்கான மருத்துவ செலவுக்கான பணத்திற்கான நெருக்கடி எதுவும் கொடுக்காமல் அவர் கொடுக்கும் வாங்கியிருக்கிறார்கள்.  

தீடிர் என கடந்த ஜீலை மாதம் கடைசியில் ஒரு நாள் நா விஜய் டிவியில் கலக்கபோவது யாரு டைட்டில் வின்னர் TSK திருச்சி சரவணன் என்று அறிமுகம் செய்து கொண்டு காவிரி மருத்துமனைக்கு சென்றவர் அந்த ஐஸ்வரியா குழந்தையை பார்க்க வேண்டும் என்று சொல்லி குழந்தையோடு சேர்ந்து புகைப்படம் எடுத்து சென்றிருக்கிறார்.   

gif 4

அதற்கு அடுத்த சில நாட்களில் அந்த குழந்தையின் பெற்றோர் திருச்சியில் ஒரு கல்லூரியின் பெயரை சொல்லி அங்க என்னோட குழந்தைக்கு உதவி செய்வதாக சொல்லியிருக்கிறார்கள். அதற்கு மருத்துவமனையில் இருந்து ஒரு கடிதம் வேண்டும் என்று கேட்க, உடனே மருத்துவமனை நிர்வாகம் மருத்துவமனையில் இந்த குழந்தை அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் இந்த குழந்தைக்கு இந்த வகையான பிரச்சனை என்று ஒரு கடிதம் கொடுத்திருக்கிறார்கள். 

அதற்கு அடுத்த சில நாட்களில் விஜய் டிவி புகழ் TSK தன்னுடைய instagram பக்கத்தில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளிட்டு அத்தோடு மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த கடிதம் என்று ஒன்றை வெளியிட்டுயிருக்கிறார். அதில் குழந்தைக்கு மருத்துவ சிகிச்சைக்கா 14 இலட்சம் ரூபாய் தேவைப்படுகிறது உதவி செய்யுங்கள் என்று எழுதியிருக்கிறது. இதை சமூகவலைதளத்தில் பார்த்தவர்கள் தினமும் பணத்தை அவர்கள் சொன்ன வங்கி எண்ணிற்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் காவிரி மருத்துவமனை நிர்வாகத்தின் நிர்வாகத்திற்கு சில பேர் இந்த குழந்தை இங்க இருக்கிறதா என்று இவ்வளவு பணம் செலவு ஆகிறதா என தொடர்ச்சியாக போன் கால்கள் வந்து கொண்டிருக்க இவ்வளவு பணம் என்று நாங்கள் எதுவும் சொல்லவில்லையே இதே போல் கடிதமும் கொடுக்கவில்லை என்று அதிர்ச்சியடைந்த நிர்வாகம் உடனே அந்த குழந்தையின் பெற்றோரை அழைத்து இந்த குழந்தையை டிச்சார்ஜ் செய்து கொள்ளுங்கள். நான் சொல்லாத தொகை, எங்கள் மருத்துவமனையின் நிர்வாகம் கொடுத்த கடித்தை போலியாக தயாரித்து சமூகவலைதளங்களில் வெளியிட்டு நீங்கள் பணம் வசூல் செய்கிறீர்கள் என்று உடனே மருத்துவமனையில் இருந்து அனுப்பி விட்டார்கள். 

இதற்கு இடையில் குழந்தையின் பெற்றோர் நாங்கள் இப்படி செய்யவில்லை, யார் யாரோ செய்த தவறுக்கு பழி எங்கள் மேல் விழுந்து விட்டது என்று புலம்பிக்கொண்டே சென்றிருக்கிறார்கள். 

இந்த பிரச்சனை குறித்து TSK சரவணனிடம் பேசிய போது..  

நான் மருத்துவ உதவிகளை என் நண்பர்கள் உதவியுடன் செய்வதை அறிந்து கொண்ட இந்த குழந்தையின் அப்பா என்னை தொடர்பு கொண்டு மருத்துவ உதவி கேட்டார். நா நேரடியா வந்து பாக்கிறேன் சொல்லி நேராகவே காவேரி மருத்துமனைக்கு சென்று பார்த்தேன். அந்த குழந்தையை பார்த்ததும் எப்படியும் காப்பாற்றிவிட வேண்டும் என நினைத்து தான் மருத்துவமனையில் இருந்து லெட்டர் வேணும்னு கேட்டேன்.

அதன் பிறகு பெற்றோர்கள் தான் இந்த லெட்டரை என்னிடம் கொடுத்தார்கள். அவர்கள் கொடுத்தது உண்மை என்று நம்பி நான் என்னுடைய வலைதளத்தில் பகிர்ந்தேன். பிறகு தான் தெரிந்தது பெற்றோர் காவிரி மருத்துமனை நிர்வாக கொடுத்த கடிதத்தை தவறாக போட்டோ ஷாப் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் என்னுடைய பக்கத்தில் இருந்து நீக்கி விட்டேன். அதுவரைக்கு வந்த மருத்துவ உதவி தொகையான 1 இலட்சத்து 20 ரூபாயை மருத்துவமனையில் கட்டிவிட்டேன். 

அதன் பிறகு குழந்தையின் பெற்றோரை கடுமையாக எச்சரிக்கை செய்தேன். உதவி செய்ய போய் தற்போது நா பெரிய மனஉளைச்சலில் இருக்கிறேன். இருந்தாலும் நான் உதவி செய்வதை நிறுத்த போவதில்லை என்றார்.  

இன்றைக்கு இருக்கும் பரபரப்பான சூழ்நிலையில் நேரடியாக சென்று உதவி செய்ய முடியாமல் பல பேர் ஆன்லைனில் உதவி செய்கிறார்கள். ஆனால் அது சரியானவர்களுக்கு போய் சேர்கிறதா ! என்பதை நீங்களே நேரடியாக பேசி உறுதி செய்த உதவி பண்ணுங்கள்.

தற்போது ஆன்லைனில் இதே போன்று போட்டேஷாப் பரிதாபத்தை ஏற்படுத்தி நம்முடைய மனங்களை கனமாக்கி  வியாபார யுத்தியாகவே பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை  எச்சரிக்கை செய்யவே இந்த பதிவு ! ..

 

 

gif 2

Leave A Reply

Your email address will not be published.