திருச்சியில் சுதந்திர தின விழா ஆலோசனைக் கூட்டம்

0
full

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி  தலைமையில் நடைபெற்றது.

வருகின்ற 15.08.2019 அன்று சுதந்திரதின விழா மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர்  தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கவுள்ளார்கள்.

சுதந்திரதின விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்;ட வருவாய் அலுவலர்  பேசியதாவது:

poster
ukr

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதி, சுகாதார வசதி, குடிநீர் வசதி செய்து கொடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு கல்வித் துறை அலுவலர்கள் விரிவான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

கலைநிகழ்ச்சியில் பங்கேற்க வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் ஆகியோருக்கு கட்டணமில்லாமல் போக்குவரத்து வசதி, தேவையான உணவு வசதி, இருக்கை வசதி, வருவாய் துறை அலுவலர்கள், அரசு போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் கல்வி துறை அலுவலர்கள் செய்து தர வேண்டும். சுதந்திரதின விழா சிறப்புடன் நடைபெற அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து செயல்படுவதோடு ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தீயணைப்புத்துறை அலுவலர்கள் விழா நடைபெறும் இடத்தில் அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். காவல் துறையினர், பொதுப்பணித் துறையினர் மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் விழா நடைபெறவுள்ள ஆயுதப்படை மைதானத்தை சீரமைத்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சுகாதாரத் துறை மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் கொண்ட குழுவினர் ஆம்புலன்ஸ் வாகனத்துடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். காவல் துறையினர் விழா நடைபெறும் மைதானத்தில் தகுந்த பாதுகாப்பு பணிகளை செய்ய வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர்  பேசினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவருத்ரய்யா, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் திருமதி.பழனிதேவி, திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அன்பழகன் (திருச்சி), இணை இயக்குநர் (நலப்பணிகள்) டாக்டர்.சம்சாத்பேகம், மாவட்ட வழங்கல் அலுவலர் கிறிஸ்டி உட்பட அனைத்துத்துறை அலுலவர்களும் பங்கேற்றனர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.