ஊடகங்களுக்கு எதிராக சாட்டையைச் சுழற்றும் திருச்சி டிஐஜி!!

0
1

பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ வெளியிட்டால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் இருப்பதாக டிஐஜி பாலகிருஷ்ணன் ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நவீன தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செய்தித் தாள்களைத் திறந்தாலே பக்கத்துக்கு ஒரு பாலியல் வழக்குச் செய்தி என்கிற ரீதியில் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தொலைக்காட்சிகளிலும் கற்பழிப்பு, செக்ஸ் குற்றச் செய்திகளை ஊதிப் பெருக்கி, டி.ஆர்.பி.க்காக செய்தி வீடியோக்களை வைரலாக்கப்பட்டு வருகிறது.

முன்பெல்லாம் அங்கொன்று, இங்கொன்று என எங்காவது ஒரு கற்பழிப்பு சம்பவம் நடக்கும். அப்போதைய ஊடகங்கள் இதுபோன்ற சம்பவங்களைச் செய்தியாக்கும்போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையோ, அந்த பெண்ணின் தாய், தந்தையரின் பெயரையோ வெளியிட மாட்டார்கள். பெண்ணின் பெயருக்குப் பதிலாக வேறு ஒரு பெயரைக் குறிப்பிட்டு அடைப்புக்குறிக்குள் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்றுதான் பிரசுரிப்பார்கள்.

ஆனால் இன்று அப்படியல்ல. பாலியல் தாக்குதலுக்கு உள்ளான பெயர், விலாசத்தை அப்படியே வெளியிடுவதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தையும் பிரசுரித்து விடுகிறார்கள். டிவி சேனல்கள் இன்னும் ஒரு படி மேலே போய் பெண் தொடர்பான அத்தனை ஆவணங்களையும் வெளியிட்டு விடுகிறார்கள்.

2
4

சமூக ஊடக போராளிகளும் பத்திரிகை, இணையதளம், தொலைக்காட்சிகளில் வெளியாகும் இதுபோன்ற பாலியல் வழக்குச் செய்திகளை உடனுக்குடன் பகிர்ந்து பத்தே நிமிடத்தில் அந்த கற்பழிப்புச் சம்பவத்தை வைரலாக்கி விடுகிறார்கள். இதன் மூலம் சம்பந்தப்பட்ட பெண் பாதிக்கப் படுவார் என்றோ, அப்பெண்ணின் உறவினர்கள் மன வேதனைக்குள்ளாவர்கள் என்றோ எவரும் நினைத்து கூட பார்ப்பதில்லை.

நிலைமை இப்படியிருக்க முதல்முறையாக தமிழக டிஐஜி பாலகிருஷ்ணன் ஊடகங்களுக்கு எதிராக அதிரடியாக சாட்டையை சுழற்றத் தொடங்கியிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விபரங்களை பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வெளியிடுவது இந்திய தண்டனைச் சட்டம் 220-ஏ (1)ன்படி குற்றமாகும். மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது, என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் இரு தினங்களுக்கு முன்பு திருச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்குள்ளான சம்பவத்தில் ஊடகங்கள், பெண்ணைப் பற்றிய தகவல்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் வெளியிட்டு அந்த பெண்ணை அடையாளப் படுத்தும் வகையில் செய்திகள் வெளியிட்டிருப்பதைக் சுட்டிக் காட்டியிருக்கிறார். அதோடு சுப்ரீம்கோர்ட்டில் 2018ம் ஆண்டு நடைபெற்ற நிபுன் சக்சேனா வழக்கின் தீர்ப்பையும் டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் சுட்டிக் காட்டியுள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.